fbpx

திடீர் திருப்பம்..!! தென்கொரிய அதிபர் யூன் சுக் பதவி நீக்கம்..!! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!! இன்னும் 2 மாதங்களுக்குள் புதிய அதிபர் தேர்வு..!!

தென்கொரிய அதிபர் யூன் சுக்கை பதவி நீக்கம் செய்து அந்நாட்டு நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

எதிர்க்கட்சியினர், வடகொரியாவுடன் இணைந்து நாடாளுமன்றத்தை முடக்க சதித் திட்டம் தீட்டுவதாக கூறி கடந்த டிசம்பர் மாதம் ராணுவ ஆட்சியை அமல்படுத்தி சில மணி நேரங்களில் வாபஸ் பெற்றார். அதன் பின்னர், அவர் மீது பல புகார்கள் எழுந்த நிலையில், தற்போது தென் கொரியாவின் அரசியலமைப்பு நீதிமன்றம் இன்று அவரை பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.

அவரது இராணுவச் சட்ட அறிவிப்பு அரசியலமைப்பு ஒழுங்கில் “கடுமையான எதிர்மறை தாக்கத்தை” ஏற்படுத்தியதால், டிசம்பர் மாதம் தேசிய சட்டமன்றத்தின் பதவி நீக்க வாக்கெடுப்பையும் இந்த தீர்ப்பு உறுதி செய்தது. தேசிய அளவில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இந்த வழக்கில் மொத்தம் 8 நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். இதில், 6 நீதிபதிகள் அதிபரின் பதவி நீக்கத்திற்கு ஆதரவாக தீர்ப்பளித்துள்ளனர். இந்த தீர்ப்பை அடுத்து, இன்னும் இரண்டு மாதங்களுக்குள் புதிய அதிபர் தேர்தலை நடத்த வேண்டிய கட்டாயத்தில் தென்கொரியா உள்ளது.

Read More : மதுப்பிரியர்கள் அதிர்ச்சி..!! தமிழ்நாடு முழுவதும் இந்த நாளில் டாஸ்மாக் கடைகள் இயங்காது..!! மீறினால் லைசன்ஸ் ரத்து..?

English Summary

A South Korean court has ordered the removal of President Yoon Suk from office.

Chella

Next Post

நீட் விலக்கு மசோதாவை நிராகரித்த மத்திய அரசு..!! வரும் 9ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம்..!! முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவிப்பு..!!

Fri Apr 4 , 2025
Chief Minister M.K. Stalin has announced in the Legislative Assembly that an all-party meeting will be held on the 9th regarding the cancellation of the NEET exam.

You May Like