fbpx

இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்தது உச்ச நீதிமன்றம்..!! – தவெக தலைவர் விஜய்

வக்பு திருத்தச் சட்டத்திற்கு எதிரான வழக்கில், உச்சநீதிமன்றம் அதிரடியாக இடைக்கால உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை வரவேற்பதாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “வக்ஃபு திருத்தச் சட்டப்படி எந்தப் புதிய உறுப்பினர் நியமனமும் மேற்கொள்ளக் கூடாது என்றும், ஏற்கெனவே பதியப்பட்ட வக்ஃபு சொத்துகள் மீது எந்தப் புதிய நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

இஸ்லாமியர்களின் உரிமையான வக்ஃபு வாரியம் தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்த புதிய சட்டத் திருத்தத்தை எதிர்த்து, தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தாக்கல் செய்த வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம், இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது.

இஸ்லாமியர்களின் உரிமைகளுக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும் நான் எப்போதும் துணை நிற்பேன், தமிழக வெற்றிக் கழகம் துணை நிற்கும் எனத் தீர்க்கமாகத் தெரிவித்துக்கொள்கிறேன். பாசிச அணுகுமுறைக்கு எதிராக நாம் தொடங்கிய சட்டப் போராட்டத்தில் நமக்குத் துணையாக இருந்து இந்த உத்தரவைப் பெற்றுத் தந்த மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி அவர்களுக்கும், அவருடைய வழக்கறிஞர் குழுவினருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Read more: வக்பு வழக்கில் திடீர் திருப்பம்.. உறுப்பினர் நியமனத்திற்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை..!!  

English Summary

The Supreme Court has poured milk into the stomachs of Muslims..!! – Vijay

Next Post

’வாக்குரிமை மட்டும் இருந்தால் அந்த தெய்வமே எங்கள் முதல்வருக்குத்தான் வாக்களிக்கும்’..!! சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர்பாபு பேச்சு..!!

Thu Apr 17 , 2025
"If gods have the right to vote, our Chief Minister will get that vote," said Minister Shekar Babu.

You May Like