தமிழ்நாட்டில் கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், வெயில் வாட்டி வதைத்து வருகிறது. அதுவும் இந்தாண்டு கோடைகாலத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகம் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையமும் எச்சரித்துள்ளது. இதன் காரணமாக ஏசியின் பயன்பாடு அதிகரித்துள்ளது. வட இந்தியாவை போலவே தமிழ்நாட்டிலும், வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. எப்போது இந்த கோடை காலம் முடியும் என்று மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
கோடை வெயில் காரணமாக பலரது வீடுகளிலும் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் போல ஏசியும் ஒரு அத்தியாவசிய பொருளாக மாறிவிட்டது. இந்த சமயத்தில் பல நிறுவனங்களும் குறைந்த விலையில் ஏசியை விற்பனை செய்து வருகின்றனர். இந்த குளிரூட்டும் சாதனங்கள் வெயிலில் இருந்து நம்மை காக்க பெரிதும் உதவுகின்றன. அதேசமயம், ஏசியை அதிகம் பயன்படுத்தும் போது மின் கட்டணங்களும் அதிகம் வரும். இதற்கு பயந்து பலரும் ஏசியை வாங்க தயங்கி வருகின்றனர்.
உதாரணமாக 1.5 டன் ஏசி ஒவ்வொரு மணிநேரம் செயல்படுவதற்கும் சுமார் 2.25 யூனிட் மின்சாரத்தை உறிஞ்சுகிறது. ஒவ்வொரு நாளும் 10 மணிநேரம் இந்த சாதனத்தை பயன்படுத்தினால் மாதாந்திர நுகர்வு 675 யூனிட்டுகளாக இருக்கும். அதாவது, மாத மின் கட்டணம் ரூ.3,500 வரை உயரக்கூடும். தினசரி 8 மணிநேரம் பலருக்கும் வீட்டில் ஏசி வாங்கி மாட்ட வேண்டும் என்று ஆசை இருந்தாலும் மின் கட்டணத்தை மனதில் வைத்துக் கொண்டு தவிர்த்து வருகின்றனர்.
1 ஸ்டார் ரேட்டிங் ஏசி
1 ஸ்டார் ரேட்டிங் கொண்ட ஏசியின் விலை மலிவானதாக இருந்தாலும் அவை அதிக மின்சாரத்தை பயன்படுத்தும். பட்ஜெட் பிரியர்களுக்கு சிறந்த மாடல் என்றால் அது 3 ஸ்டார் ரேட்டிங் கொண்ட 1.5 டன் மாடல் ஏசி தான். இந்த ஏசி அதிக மின்சாரத்தை பயன்படுத்துவதில்லை. 1 ஸ்டார் ரேட்டிங் கொண்ட ஏசியை விட இதில் மின் கட்டணம் குறைவாகத்தான் வரும். அதேபோல், 5 ஸ்டார் ரேட்டிங் கொண்ட ஏசிகள், விலை சற்று அதிகம் இருந்தாலும். மின்சார கட்டணத்தை பெரியளவில் குறைக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது.
3 ஸ்டார் ரேட்டிங் ஏசி
3 ஸ்டார் ரேட்டிங் கொண்ட 1.5 டன் ஏசி சாதனம் ஒரு மணி நேரத்திற்கு 1104 வாட்ஸ் மின்சாரத்தை பயன்படுத்துகிறது. எனவே, இந்த ஏசியை நீங்கள் 8 மணி நேரம் பயன்படுத்தினால், உங்களுக்கு 9 யூனிட் மின்சாரம் செலவாகும். உங்கள் பகுதியில் 1 யூனிட் மின்சாரம் ரூ.7.50 என்று வைத்துக் கொண்டால், நாளொன்றுக்கு ரூ.67.50 வரை செலவாகும். மாதம் ரூ.2,000 வரை செலவாகும்.
5 ஸ்டார் ரேட்டிங் ஏசி
ஒருவேளை, 5 ஸ்டார் ரேட்டிங் கொண்ட ஏசி மாடலை பயன்படுத்துகிறீர்கள் என்றால், அது 1 மணி நேரத்திற்கு 840 வாட்ஸ் மின்சாரத்தை உறிஞ்சும். உங்கள் பகுதியில் 1 யூனிட் ரூ.7.50 என்று வைத்துக் கொண்டால், 8 மணி நேரத்திற்கு ரூ.48 செலவாகும். ஒரு மாதத்திற்கு ரூ.1,500 வரை செலவாகும். 3 ஸ்டார் ரேட்டிங் ஏசியை விட இதில் ரூ. 500 மிச்சமாகிறது.
இவற்றையெல்லாம் விட, தற்போது சந்தையில் டூயல் இன்வெர்டர் ஏசி மாடல்கள் விற்பனை செய்யப்படுகிறது. இவற்றின் விலை சற்று அதிகமாக இருந்தாலும், குறைந்த அளவு மின்சாரத்தை பயன்படுத்துவதினால், இன்னும் கணிசமான அளவு மின்சார கட்டணத்தை உங்களால் குறைக்க முடியும். இருப்பினும் இரவில் நிம்மதியான தூக்கம் பெற ஏசி அடிப்படை தேவை என்ற நிலை கிட்டத்தட்ட வந்து விட்டது. நீண்ட நேரம் ஏசியில் இருக்கும் போது அதன் காற்று சருமத்தை உலர்த்தி எரிச்சல் மற்றும் அசௌகரியத்தையும் உண்டாக்கும்.
சிலருக்கு ஆஸ்துமா அல்லது மூச்சுக்குழாய் அழற்சி போன்ற சுவாசக் கோளாறுகளை அதிகரிக்க செய்யும். நீண்ட நேரம் ஏசியில் இருந்துவிட்டு, வெளியே வரும் போது வெப்பநிலையில் திடீர் மாற்றம் ஏற்படும். இதனால், உங்களுக்கு தலைவலி மற்றும் ஒற்றைத் தலைவலி வரக்கூடும். ஏசியில் அதிக நேரம் செலவிடுவது சோர்வு மற்றும் சோம்பலுக்கு வழிவகுக்கும். நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனப்படுத்தி பல்வேறு நோய்களுக்கு ஆளாக நேரிடும். குறிப்பாக போதுமான அளவு தண்ணீர் குடிக்கவில்லை எனில், தசை விறைப்பு மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தும்.
Read More : சென்னையில் மீண்டும் ஆட்டத்தை ஆரம்பித்த கொரோனா வைரஸ்..!! பொது சுகாதாரத்துறை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!!