ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் பகுதியில் இன்று (ஏப்ரல் 22) பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்தச் சம்பவம் பைசரன் எனப்படும் பிரபலமான புல்வெளியில் நடைபெற்றதாகவும், அங்கு சுற்றுலா வந்திருந்தவர்களே இலக்காக தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த திடீர் துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 26 பேர் உயிரிழந்துள்ளதாகவும்,13 பேருக்கு மேல் காயமடைந்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்ட்டுள்ளது. காயமடைந்தவர்களில் சிலர் கடும் உயிர் ஆபத்துடன் சிகிச்சை பெற்றுவருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களில் தமிழ்நாடு, கர்நாடகா, குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களை சேர்ந்தவர்களும் உள்ளதாக கூறப்படுகிறது. இந்தத் தாக்குதல், சம்பவம் காஷ்மீர் பகுதியில் நடந்த மிகப் பெரும் அதிர்ச்சியூட்டும் சம்பவமாக பார்க்கப்படுகிறது.
இந்தச் சம்பவம் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பதிவில், “ஜம்மு- காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலால் நான் மிகவும் வேதனையடைந்தேன். இறந்தவரின் குடும்பத்தினருடன் எனது எண்ணங்கள் உள்ளன. இந்த கொடூரமான பயங்கரவாதச் செயலில் ஈடுபட்டவர்கள் தப்பிக்க முடியாது, குற்றவாளிகளுக்கு பின்விளைவுகள் மோசமாக இருக்கும்.
சம்பவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடியிடம் விளக்கமளித்தேன், மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் காணொளி மூலம் ஒரு சந்திப்பை நடத்தினேன். அனைத்து நிறுவனங்களுடனும் அவசர பாதுகாப்பு மறுஆய்வுக் கூட்டத்தை நடத்துவதற்காக விரைவில் ஸ்ரீநகருக்குச் செல்வேன்” என்று கூறியுள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து நடத்தப்பட்ட துயரகரமான பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஸ்ரீநகருக்கு விரைந்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் உத்தரவின் பேரில் இந்த பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் அனந்த்நாக் காவல்துறை சுற்றுலா பயணிகளுக்கு அவசர உதவி எண்களை அறிவித்துள்ளது. இது குறித்து X இல் பதிவிட்டுள்ள அனந்த்நாக் காவல்துறை, “சுற்றுலாப் பயணிகளுக்கான 24/7 அவசர உதவி மையம் – அனந்த்நாக் காவல் கட்டுப்பாட்டு அறை. உதவி அல்லது தகவல் தேவைப்படும் சுற்றுலாப் பயணிகளுக்கு உதவுவதற்காக அனந்த்நாக் காவல் கட்டுப்பாட்டு அறையில் ஒரு பிரத்யேக உதவி மையம் நிறுவப்பட்டுள்ளது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவசர உதவி எண்கள்: 9596777669 | 01932225870 | WhatsApp 9419051940.
*24/7 Emergency Help Desk for Tourists –Police Control Room Anantnag*
— Anantnag Police( اننت ناگ پولیس) (@AnantnagPolice) April 22, 2025
A dedicated help desk has been established at the Police Control Room Anantnag to assist tourists requiring assistance or information.
Contact Details:
📞 9596777669
01932225870
Whatsapp 9419051940
Read More: பயங்கரவாத தாக்குதலில் பலி எண்ணிக்கை 27 ஆக உயர்வு.. காஷ்மீர் விரைந்தார் அமித்ஷா…!! பெரும் பரபரப்பு..