மதுரை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரிகளை வரும் ஏப்ரல் 30-ம் தேதிக்குள் செலுத்தினால் 5% (அதிகபட்சம் ரூ.5000) சிறப்பு சலுகை என மாநகராட்சி அறிவித்துள்ளது. வரிகள் செலுத்த வசதியாக மாநகராட்சி வரிவசூல் மையங்கள், விடுமுறை நாட்களில் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாநகராட்சிக்கு குடிநீர், பாதாளச் சாக்கடை, தொழில், குப்பை வரி என, பல்வேறு வகையில் ஆண்டுக்கு பல கோடி வருவாய் கிடைக்கிறது. இருப்பினும், சொத்து வரியே மாநகராட்சிக்கு பிரதான வருவாயாக உள்ளது. இதன்மூலம் ஆண்டுக்கு சுமார் ரூ.350 கோடி வருவாய் கிடைக்கிறது. இவற்றின் மூலம் மாநகராட்சி பகுதியிலுள்ள வார்டுகளுக்கான வளர்ச்சி, ரோடுகள் பராமரிப்பு, கால்வாய்கள் சுத்தப்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும். இதற்காக மாநகராட்சிகள் ஆண்டுக்கு 6 சதவீதம் சொத்து வரி சமிபத்தில் உயர்த்தப்பட்டது.
2024-25 நிதியாண்டுக்கான மதுரை மாநகராட்சியின் சொத்து வரி வசூல் இலக்கு ரூ.254.53 கோடியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரிகளை வரும் ஏப்ரல் 30ம் தேதிக்குள் செலுத்தினால் 5% (அதிகபட்சம் ரூ.5000) சிறப்பு சலுகை என மாநகராட்சி அறிவித்துள்ளது. வரிகள் செலுத்த வசதியாக மாநகராட்சி வரிவசூல் மையங்கள், விடுமுறை நாட்களில் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.