கையேந்தி பவன் முதல் ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் வரை உணவுகளை சாப்பிட்டு ரிவியு செய்து யூடியூபில் வீடியோ வெளியிட்டு பிரபலமானவர் இர்ஃபான். அரசியல் பிரமுகர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை தனது ஷோவிற்கு விருந்தினராக அழைத்து வீடியோ வெளியிட்டார். இவரது திருமணத்தில் பல்வெறு முக்கிய பிரபலங்கள் கலந்துகொண்டார்கள். அண்மைக் காலமாக அவ்வப்போது சர்ச்சையில் சிக்கி சில பல சம்பவத்திற்கு உள்ளாகி வருகிறார்.
வெளிநாட்டிற்கு சென்று தனது குழந்தையின் பாலினத்தை தெரிந்துகொண்டு சமூகவலைதளத்தில் வெளியிட்டது. மனைவிக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறக்கும்போது உடனிருந்த யூடியூபர் இர்ஃபான், குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டியதோடு, அதனை வீடியோவாகவும் வெளியிட்டது என அடுக்கடுக்கான சர்ச்சைகளில் சிக்கியிருந்தார்.
சமீபத்தில் கூட ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இர்ஃபான் தனது மனைவியுடன் காரில் சென்று பொதுமக்களுக்கு பரிசுகளை வழங்கினார். இர்ஃபான் மற்றும் அவரது மனைவி காரில் அமர்ந்தபடியே சாலையில் செல்வோருக்கு பரிசு வழங்கினார். அப்போது முண்டியடித்து கூட்டம் கூடையது இர்ஃபான் அவர்களிடம் மரியாதைக் குறைவாக பேசுகிறார். ‘அசிங்கமா பண்ணாதீங்க’ ‘ கைய நீட்டாதீங்க என அவர் சொன்னது சமூக வலைதளங்களில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியது.
தொடர்ந்து முன்னேற்பாடுகள் ஏதும் இல்லாமல் மனைவியுடன் காரில் சென்று உதவி செய்ததால் சூழலை கையாளத் தெரியவில்லை என்று கூறியுள்ள இர்ஃபான், அதில் திணறி சில விஷயங்கள் செய்துவிட்டதாகவும், அதற்காக மனம் வருந்துவதாகவும் தெரிவித்து வீடியோ வெளியிட்டார்.
இந்த நிலையில் மீண்டும் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் ரம்ஜானை முன்னிட்டு பரிசு பொருட்கள் வழங்கியபோது நான் நடந்து கொண்ட விதம் தவறு தான்.. இல்லாதவர்களை பார்த்து சிரிக்கும் ஆள் நான் இல்லை.. என்ன இருந்தாலும் நான் அப்படி செய்திருக்க கூடாது எனக் கூறியுள்ளார். அங்குள்ள இரண்டு சின்ன பசங்களை பார்த்து இதுக எனக் குறிப்பிட்டேன். அதை பெருசா ட்ரோல் செய்திருக்காங்க்க.. எங்க வீட்ல நாங்கள் உரிமையோட இப்படி தான் பேசுவோம்.. அந்த உரிமையில் தான் அப்படி பேசினேன். இதை சிலர் பப்ளிசிட்டிக்காக பெரிசு பண்ணிட்டாங்க என தெரிவித்தார். சர்ச்சையில் சிக்கிய ஒரு மாதங்களுக்கு பிறகு மீண்டும் விளக்கம் அளித்திருப்பதை நெட்டிசன்கள் இதுவும் விளம்பரமா எனக் கூறி விமர்சித்து வருகின்றனர்.