ஈரோட்டை சேர்ந்த ஜவுளி வியாபாரி மகேந்திரன். இவருக்கு திருமணம் ஆகி பதுமேகலா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு சஞ்சனா ஸ்ரீ என்ற ஆறு வயது மகள் உள்ளார். இதனிடையே மகேந்திரனுக்கு கல்லீரல் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதற்கு சிகிச்சை சென்னை வடபழனியில் வாடகை வீடு எடுத்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இதனிடையே கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சஞ்சனா ஸ்ரீக்கு பிறந்தநாள் வந்துள்ளது. தாயார் தன் மகளின் பிறந்தநாளை கொண்டாட கடற்கரைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு பொரித்த மீன் மற்றும் சிக்கன் ப்ரைட் ரைஸ் ஆகியவற்றை மகளுக்கு வாங்கிக் கொடுத்து பிறகு வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார். அப்போது சஞ்சனாவுக்கு காய்ச்சல் இருந்ததால் மருந்து கொடுத்து தூங்க வைத்துள்ளார்.
மறுநாள் காலை மகளை எழுப்பிய போது எந்தவித அசைவும் இல்லாமல் இருந்த நிலையில் வாய் மற்றும் மூக்கில் ரத்தம் கசிந்ததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுமி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதனைக் கேட்டு பெற்றோர் கதறி எழுதினர். உடனே தகவல் அறிந்து வந்த போலீசார் சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Read more: மக்களே உஷார்..! RTO பெயரில் புது வகை மோசடி.. வங்கிக் கணக்கில் இருந்து மொத்த பணமும் காலி!