குஜராத் மாநிலத்தில் கண்பார்வை இழந்த 26 வயது பெண்ணை வண்புணர்வு செய்ததாக இருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அஙங்கு பதற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. குஜராத் மாநிலத்தில் உள்ள வல்சாத் மாவட்டத்தில் தான் இந்த சம்பவம் நடைபெற்றிருக்கிறது. கடந்த வருடம் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் நடைபெற்ற இந்த சம்பவத்திற்கு எதிராக பெண் இப்போது புகார் அளித்திருக்கிறார். இது தொடர்பாக என் ஜி ஓ வில் பணியாற்றும் இரண்டு நபர்களை காவல்துறை கைது செய்து விசாரித்து வருகிறது. இந்த வன்புணர்வு சம்பவம் தொடர்பாக கனா பதர்கா என்ற 40 வயது நபரும் திலீப் தவானி என்ற 35 வயது நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். இவர்கள் இருவரும் சல்சும்பா கிராமத்தில் இயங்கி வரும் என்.ஜி.ஓ ஒன்றில் பணியாற்றி வருகின்றனர். இந்த நிறுவனம் கண் பார்வை இழந்தவர்களுக்கு உணவு மற்றும் உறைவிட வசதிகளை வழங்கும் ஒரு நிறுவனமாகும். கண்பார்வை இழந்த இந்த 26 வயது பெண்ணும் அவரது கணவரும் கிராமத்தில் வசித்து வருகின்றனர். கணவர் வீட்டிலில்லாத நேரம் அந்தப் பெண்ணின் வீட்டிற்கு சென்ற இந்த இரண்டு நபர்களும் அவரை பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். இது தொடர்பாக தற்போது அந்தப் பெண் அளித்த புகாரின் பேரில் இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கண் பார்வை இழந்த பெண்ணை அவர்களுக்கு உதவி செய்யும் என்.ஜி.ஓ வை சார்ந்த இரண்டு நபர்களே பாலியல் பலாத்காரம் செய்திருப்பது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.