ஸ்னாக்ஸ் பாக்கெட்டில் இருந்த ஒரு பொம்மை வெடித்ததில், ஒரு சிறுவன் கண் பார்வையை இழந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது.. ஒடிசாவின் பலங்கிர் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.. அந்தச் சிறுவன் ஞாயிற்றுக்கிழமை அன்று ஒரு உள்ளூர் கடையில் இருந்து 5 ரூபாய் மதிப்புள்ள ‘லைட் ஹவுஸ்’ கார்ன் பஃப்ஸ் பாக்கெட் ஒன்றை வாங்கியுள்ளான். தின்பண்டத்தைச் சாப்பிட்ட பிறகு, அந்தப் பொம்மையுடன் விளையாடிக்கொண்டிருந்தபோது, அது வெடித்து சிறுவனின் கண்ணில் பட்டது. இந்த வெடிப்பால் சிறுவனின் கண்விழி சிதைந்தது..
சிறுவன் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டான். அங்கு மருத்துவர்கள் சிறுவனின் கண் நிரந்தரமாகப் பாதிக்கப்பட்டுவிட்டதை உறுதி செய்தனர்.
சிறுவனின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்து, அந்தப் பொருளை முழுமையாக தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். உற்பத்தி நிறுவனம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், காயமடைந்த தங்கள் குழந்தைக்கு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Read More : செம ஆஃபர்! விமான டிக்கெட் வெறும் 1 ரூபாய்க்கு! இன்னும் 3 நாட்களே உள்ளன..! இப்போதே புக் பண்ணுங்க!



