வானில் இன்று நடக்கும் அதிசயம்..! வெறும் கண்களால் பார்க்கலாம்..! இன்னைக்கு மிஸ் பண்ணிட்டா மீண்டும் அடுத்த வருஷம் தான்..!

Saturn 2026

சூரியக் குடும்பத்தின் அழகிய கோளான சனிக்கிரகம், பூமிக்கு மிக அருகாமையில் வந்து வழக்கத்தை விடவும் அதிகப் பிரகாசத்துடனும் பெரிய அளவிலும் காட்சியளிக்கும் அரிய வானியல் நிகழ்வு இன்று (அக். 4) நிகழவுள்ளது. சூரியன் மற்றும் சனிக்கிரகத்திற்கு நேர் நடுவே பூமி ஒரே நேர்க்கோட்டில் கடந்து வரும்போது உருவாகும் இந்த நிகழ்வை பொதுமக்கள் விடிய விடிய பார்த்து ரசிக்கலாம்.


வானியலில் ‘எதிர்நிலை’ (Opposition) என்று அழைக்கப்படும் இந்த நிகழ்வின் போது, சூரியன் மறையும் மாலையில் கிழக்கு வானில் உதிக்கும் சனிக்கிரகம், மறுநாள் அதிகாலை சூரிய உதயம் வரை வானில் முழுமையாக காட்சியளிக்கும். வெறும் கண்களால் பார்க்கும்போது இது ஒரு பிரகாசமான விண்மீன் புள்ளி போல மட்டுமே காட்சியளிக்கும் என்றாலும், சிறிய அளவிலான சாதாரண தொலைநோக்கி (Telescope) அல்லது மேம்பட்ட பைனாகுலர் (Binoculars) மூலம் உற்றுநோக்கினால் சனிக்கிரகத்தின் அழகிய வளையங்களை துல்லியமாக பார்க்க முடியும்.

இந்த நிகழ்வு குறித்து அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘நாசா’ (NASA) வெளியிட்டுள்ள தகவலில், “பூமி சூரியனை ஒருமுறை சுற்றிவர ஓராண்டு காலமாகும் நிலையில், சனி கிரகம் சூரியனை முழுமையாக சுற்றி முடிக்க 29.5 ஆண்டுகள் எடுத்துக்கொள்கிறது. பூமியின் சுற்றுப்பாதை சிறியதாகவும் வேகம் அதிகமாகவும் இருப்பதால், ஆண்டுக்கு ஒருமுறை பூமி, சூரியனுக்கும் சனிக்கும் நடுவே சரியாக கடந்து செல்கிறது. சனிக்கிரகத்தின் தோற்றத்தை மிக தெளிவாகக் காண்பதற்கு இந்த ஆண்டின் ஆகச்சிறந்த வாய்ப்பாக இன்று அமையும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தோராயமாக 378 நாட்களுக்கு ஒருமுறை நிகழும் இந்த அரிய நிகழ்வு, முன்னதாக கடந்த 2025 செப்டம்பர் 21 அன்றும், அடுத்ததாக 2027 அக்டோபர் 16 அன்றும் நிகழவுள்ளது. பூமியும் சனியும் நீள்வட்டப் பாதையில் பயணிப்பதால் தூரமும் பார்க்கும் கோணமும் மாறிக்கொண்டே இருக்கும் வேளையில், இன்று அமையும் இந்த எதிர்நிலை நிகழ்வு மக்களுக்கு கண்கொள்ளா காட்சியாக அமையும் என வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

Read More : எல் நினோ தாக்கம் குறைந்ததும் என்ன நடக்கும்? குட் நியூஸ் சொன்ன இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன்!

Next Post

இன்றுடன் ஓய்கிறது அனல் பறக்கும் பிரச்சாரம்! இறுதிகட்ட வாக்கு சேகரிப்பில் அரசியல் தலைவர்கள்!

Sun Oct 4 , 2026
தமிழக அரசியல் களத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மதுராந்தகம், தாராபுரம் தனித் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பிரச்சாரம் இன்று (அக். 4) மாலை 6 மணியுடன் ஓய்கிறது. நடந்து முடிந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), சத்தியபாமா (தாராபுரம்) ஜெயக்குமார், இசக்கி சுப்பையா, சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகிய எம்.எல்.ஏ.-க்கள் அடுத்தடுத்து பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஆளுங்கட்சியான தவெக-வில் இணைந்தனர். பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய […]
Vijay Stalin Eps Seeman 2026

You May Like