திடீரென கரை ஒதுங்கிய ராட்சத பொருள்..!! யாரும் வராதீங்க..!! தடை செய்யப்பட்ட பகுதி..!! மீனவர்கள் அச்சம்..!!

திருவெண்காடு அருகே கடலில் இருந்து மர்மப் பொருள் ஒன்று கரை ஒதுங்கியுள்ள நிலையில், அதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு அருகே கீழமூவர்க்கரை மீனவ கிராமத்தில் நேற்றைய தினம் சுமார் 10 அடி அகலம் கொண்ட மிகப்பெரிய மர்ம பொருள் ஒன்று கரை ஒதுங்கியது. அது என்ன பொருள் என்பது குறித்து தெரியாத நிலையில், மீனவர்கள் கடலோர காவல் குழும போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர், அங்கு விரைந்த போலீசார், இதுகுறித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அந்தப் பொருள் கடலில் தடை செய்யப்பட்ட பகுதி என்பதை அடையாளப்படுத்துவதற்காக மிதக்க விடும் பொருள் என தெரியவந்தது. இதை போயா என அழைக்கின்றனர். இந்தப் பொருள் எங்கிருந்து அடித்து வரப்பட்டது என பூம்புகார் கடலோர காவல் குழும போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடற்கரையில் ஒதுங்கிய இந்த மர்மப் பொருள் குறித்த விவரம் அங்கு தீயாய் பரவியது.

வித்தியாசமான உருவம் கொண்ட அந்த பொருளை அப்பகுதி பொதுமக்களும், பூம்புகாருக்கு சுற்றுலா வரும் சுற்றுலாப் பயணிகளும் திரண்டு வந்து ஆர்வத்துடன் பார்த்துச் செல்கின்றனர். இதனால் தற்காலிக சுற்றுலா மையமாக கீழமூவர்கரை கிராமம் மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Read More : அடிக்கிற வெயிலுக்கு ஐஸ் வாட்டர் குடிக்க தோணுதா..? இதில் எவ்வளவு ஆபத்து இருக்குன்னு தெரியுமா..?

Chella

Next Post

நிலவில் கார் பந்தயம்!… எப்படி இருக்கும்?… AI புகைப்படம் வைரல்!

Tue Apr 16 , 2024
Moon: நிலவில் கார் பந்தயம் நடந்தால் எப்படி இருக்கும் என்று AI உருவாக்கிய புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. விண்வெளியில் பூமிக்கு மிக அருகில் இருப்பது நிலவு மட்டும் தான். அதனால் தான் நிலவு குறித்த ஆராய்ச்சியில் உலக நாடுகள் ஆர்வம் காட்டுகின்றன. 1958 முதல் இன்று வரை கிட்டத்தட்ட 140 முறை நிலவுக்கு உலக நாடுகள் விண்கலத்தை அனுப்பியுள்ளன. அதில் வெகு சில திட்டங்கள் தான் மனிதர்களை உள்ளடக்கியவை. பெரும்பாலானவை […]

You May Like