ராணுவத்தில் சேர விரும்பும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ஒங்கிணைந்த பாதுகாப்பு சேவைகள் (CDS) தேர்வு அறிவிப்பை யுபிஎஸ்சி வெளியிட்டுள்ளது. 2026-ம் ஆண்டில் மொத்தம் 451 காலி பணியிடங்களை நிரப்ப இந்தத் தேர்வு நடத்தப்பட உள்ளது. பட்டப்படிப்பு தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்தத் தேர்வின் மூலம் இந்திய ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவற்றில் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
பணியிட விவரம்:
இந்திய ராணுவ அகாடமி, டேராடூன் – 100
இந்திய கடற்படை அகாடமி, எழிமலா – 26
விமானப்படை அகாடமி, ஹைதராபாத் – 32
அதிகாரிகள் பயிற்சி அகாடமி, சென்னை (ஆண்கள்) – 275
அதிகாரிகள் பயிற்சி அகாடமி, சென்னை (பெண்கள்) – 18
வயது வரம்பு: 02.01.2003 தேதிக்கு முன்னரும், 01.01.2008 தேதிக்கு பின்னரும் பிறந்திருக்கக்கூடாது. விமானப்படைக்கு 20 முதல் 24 வயது வரை, 01.01.2007 பின்னர் பிறந்தவராக இருக்கக்கூடாது.
கல்வித்தகுதி:
- இந்திய ராணுவ அகாடமி மற்றும் அதிகாரிகள் பயிற்சி அகாடமி இடங்களுக்கு ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருந்தால் போதுமானது.
- கடற்படை அகாடமிக்கு பொறியியலில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
- விமானப்படை அகாடமிக்கு இயற்பியல் மற்றும் கணிதம் கொண்டு பட்டப்படிப்பு அல்லது பொறியியல் பட்டப்படிப்பு முடித்திருக்கலாம்.
- ராணுவ விதிமுறைகளுக்கு உட்பட்டு உடற்தகுதிக் கொண்டு இருக்க வேண்டும்.
- விண்ணப்பதார்கள் திருமணமாகாதவர்களாக இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
ராணுவ அகாடமிகளில் உள்ள காலிப்பணியிடங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
முப்படை அகாடமி (IMA, INA, AFA) இடங்களுக்கு, ஆங்கிலம், பொது அறிவு,
தொடக்கக்கல்வி கணிதம் என மூன்று பாடங்களில் தலா 2 மணி நேரம் தேர்வு நடத்தப்படும். ஒவ்வொரு பாடமும் 300 மதிப்பெண்களுக்கு நடைபெறும்.
அதிகாரிகள் பயிற்சி அகாடமி (OTA) இடங்களுக்கு, ஆங்கிலம், பொது அறிவு
என இரண்டு பாடங்களில் தலா 2 மணி நேரம் தேர்வு நடைபெறும். இதன் மொத்த மதிப்பெண்கள் 200 ஆகும்.
எழுத்துத் தேர்வில் தகுதி பெறுபவர்கள் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். இதில் தேவையான உடற்தகுதி விதிமுறைகள், கட்டாய நிபந்தனைகள் மற்றும் விலக்கு வழங்கப்படும் அம்சங்கள் குறித்த முழுமையான விவரங்கள் தேர்வு அறிவிப்பில் இடம்பெற்றுள்ளன.
எப்படி விண்ணப்பிப்பது? யுபிஎஸ்சி மூலம் நடத்தப்படும் இத்தேர்விற்கு விண்ணப்பிக்க ஆர்வமாக உள்ள பட்டதாரிகள் https://upsconline.nic.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 30.12.2026 மாலை 6 மணி வரை.



