அதிமுக முன்னாள் அமைச்சரும் மூத்த தலைவருமான செங்கோட்டையன் இன்று விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார்.. இதை தொடர்ந்து புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண் ராஜ், நிர்மல் குமார் ஆகியோருடன் இணைந்து செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது பேசிய அருண் ராஜ் “ தவெகவில் அண்ணன் செங்கோட்டையன் இணைந்த நாள் தமிழக அரசியல் வரலாற்றி முக்கியமான நாள்.. செங்கோட்டையன் தவெகவுக்கு வரப்போவதை அறிந்து பல கட்சிகள் பதறின.. 2026 சட்டமன்ற தேர்தலில் தவெக அமோக வெற்றி பெற்று விஜய் தலைமையில் ஆட்சி அமையும்..” என்று தெரிவித்தார்..
தொடர்ந்து பேசிய ஆதவ் அர்ஜுனா “ தேசிய கட்சிகள் முதல் ஆளுங்கட்சி வரை செங்கோட்டையனை இழுக்க முயற்சி செய்தார்கள். 55 ஆண்டுகள் ஒரு கட்சியில் இருந்து, மிகப்பெரிய அனுபவத்துடன் செங்கோட்டையன் அண்ணன் வந்திருக்கிறார்.. எங்களிடம் வேகம் உள்ளது.. வேகமும் அனுபவமும் இணைந்து 2026 தேர்தலில் வரலாறு படைப்போம்..” என்று தெரிவித்தார்..
தொடர்ந்து பேசிய செங்கோட்டையன் “ பத்திரிகையாளர்களாகிய நீங்கள் 2 நாட்களாக நீங்கள் படும் கஷ்டங்களை நான் கண்கூடாக பார்த்தேன்.. அனைத்து ஊடகங்களும் போட்டிப் போட்டுக் கொண்டு கடுமையாக உழைத்த நிருபர்களுக்கு எனது வாழ்த்துகள்.. அதிமுகவில் புரட்சி தலைவரால் நான் அடையாளம் காட்டப்பட்டவன்.. 1972-ல் அதிமுக தொடங்கப்பட்ட போது எம்.ஜி.ஆருடன் இருந்தவர்களில் நானும் ஒருவன்.. எம்.ஜி.ஆர் பாராட்டும் அளவுக்கு என் பணி இருந்தது..
அதிமுக கட்சி தொடங்கப்பட்ட போது இந்த கட்சி 100 நாட்கள் கூட தாண்டாது என்று எதிர்க்கட்சியினர் கூறினர்.. எம்.ஜி.ஆர் மறைவுக்கு பிறகு அதிமுக இரண்டாக உடைந்த போது அம்மா வழியில் நான் பயணத்தை மேற்கொண்டேன்.. அம்மாவின் பாராட்டுகளை நான் பெற்றிருக்கிறேன். ஆனால் இன்று அதிமுகவின் நிலை வேறு..
அம்மா மறைவுக்கு பின் ஆட்சி நடத்தினோம்.. அதன்பின்னர் அதிமுக பல கூறுகளாக பிரிந்தது.. அனைவரும் ஒன்றாக இணைய வேண்டும் என்ற நோக்கத்தில் அந்த கருத்துகளை வலியுறுத்தினேன்.. அந்த கருத்துகளை செயல்படுத்த முடியவில்லை.. முதலில் எனது பொறுப்புகளை எடுத்தார்கள்.. தேவர் ஜெயந்திக்கு பின் உறுப்பினர் பதவியை கூட எடுத்துவிட்டார்கள்.. 50 ஆண்டுகளாக இயக்கத்திற்காக பணியாற்றியதற்காக எனக்கு கிடைத்த பரிசு தான் இது..
என்னை சார்ந்து இயங்கியவர்களும் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டனர்.. எனவே தெளிவாக முடிவெடுத்த பின் நான் எனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து விட்டு இன்று தவெகவில் இணைந்துள்ளேன்..
திமுகவும் அதிமுகவும் வேறல்ல.. எனது பயணத்தை பொறுத்தவரை, ஒரு தூய்மையான ஆட்சி அமைய, விஜய் அவர்கள் தமிழக வெற்றி கழகத்தை தொடங்கி உள்ளார். விஜய் ஆட்சிக்கு வர வேண்டும் குழந்தைகள் விரும்புகின்றனர்.. தமிழகத்தில் ஒரு அரசியல் மாற்றம் வேண்டும்.. இந்தியா முழுவதும் அரசியல் மாற்றங்கள் நடந்து கொண்டிருக்கிறது.. அந்த வகையில் தமிழகத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும், தூய்மையான ஆட்சி வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்.. தமிழக வெற்றிக் கழகம் அந்த மாற்றத்தை கொண்டு வரும்.. 2026 தேர்தலில் மக்களால் மாபெரும் புரட்சி உருவாகி தவெக தலைவர் அன்புக்குரிய இளவல் விஜய் வெற்றி பெறுவார் என்பதை உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன்..” என்று தெரிவித்தார்..
Read More : Flash : “அண்ணனின் அரசியல் அனுபவம் தவெகவுக்கு உறுதுணையாக இருக்கும்..” செங்கோட்டையனை வரவேற்று விஜய் வீடியோ..!



