டிரைவிங் தெரியுமா..? அரசு மருத்துவ கல்லூரியில் ஓட்டுநர் வேலை இருக்கு..!! ரூ.71,900 வரை சம்பளம்..!!

job 1 1

கிருஷ்ணகிரி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியில் ஓட்டுனர் பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நிரந்தர நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. 


வயது வரம்பு: அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வுகள் பொருந்தும். பொது பிரிவினருக்கு 20 to 32 வயது வரை இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு – 20 to 37 வயது வரை இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 19,500 – 71,900 

கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கனரக வாகன ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும். மேலும் 2 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம். 

விண்ணப்ப கட்டணம்: விண்ணப்ப கட்டணம் ஏதுமில்லை. தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

எப்படி விண்ணப்பிப்பது? தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் இந்த பணியிடத்திற்கான விண்ணப்ப படிவத்தினை https://krishnagiri.nic.in/ என்ற மாவட்டத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதனை பூர்த்தி செய்து, நேரிலோ அல்லது, தபால் மூலமாகவுமோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம். 

அனுப்ப வேண்டிய முகவரி: முதல்வர், அரசு மருத்துவக் கல்லூரி, போலுப்பள்ளி, கிருஷ்ணகிரி மாவட்டம் – 635115 என்ற முகவரிக்கு தபால் மூலமா அனுப்பலாம். அப்படி இல்லை என்றால் deangkgimc@tn.gov.in என்ற மின்னஞ்சல் மூலமாக அனுப்பலாம்.

தேவையான ஆவணங்கள்: விண்ணப்பத்துடன் அனைத்து கல்வி சான்றிதழ், சாதி சான்றிதழ், ஓட்டுநர் உரிமம், முன்னுரிமை சான்று, ஆதார் அட்டை ஆகிய நகல்களுடன் அனுபவ சான்று இணைக்கப்பட வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி அறிக்கவிப்படவில்லை. விரைவில் விண்ணப்பிப்பவர்களுக்கு முன்னுரிமை.

Read more: மாநிலங்களவைத் தேர்தல் – அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு…! தேமுதிகவுக்கு 2026-ல் ஒரு சீட்…!

Next Post

கழிவறையில் கொதிக்கும் சோறு.. பொது கழிப்பிடத்தில் வட மாநில இளைஞர்கள் குடித்தனம்..!! அரே பையா நியாமா இது..?

Sun Jun 1 , 2025
தூய்மை பாரதம் 2.0 திட்டத்தின் கீழ் 36.28 லட்சம் மதிப்பீட்டின் கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வராத பொதுக் கழிப்பிடத்தில் சுமார் 1 வருடங்களுக்கு மேலாக தங்கி வரும் வடமாநில இளைஞர்கள்.. சென்னை திருவேற்காடு நகராட்சி வீரராகவபுரம் காடுவெட்டி பகுதியில் தூய்மை பாரதம் இயக்கம் 2.0 என்ற திட்டத்தின் சார்பில் 2021-2022 ஆண்டின் கீழ் பொது கழிப்பிடம் 36.28 லட்சம் மதிப்பீட்டில் ஒன்று கட்டப்பட்டுள்ளது. பொது கழிப்பிடம் கட்டி முடிக்கப்பட்டு சுமார் […]
public toilet

You May Like