தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய்.. தற்போது அரசியல் தலைவராக மாறி உள்ள விஜய்யின் கடைசி படம் ஜனநாயகன் தான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. ஹெச்.வினோத் இயக்கும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்கிறார்.. மேலும் பாபி தியோல், மமிதா பைஜு, கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ், நரேன், பிரியா மணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்..
இந்த படத்தை கேவிஎன் புரொட்க்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.. அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.. இந்த அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது..
இந்த நிலையில் ஜனநாயகன் படத்திற்கு இன்னும் சென்சார் சான்றிதழ் வழங்கப்படவில்லை என்று கூறி படத்தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.. இந்த வழக்கை அவசர வழக்காக இன்று விசாரணைக்கு வந்தது.. அப்போது படத்தயரிப்பு நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் “ இந்த படத்திற்காக ரூ.500 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.. யாரோ ஒருவர் புகார் அளித்த புகாருக்காக சான்றிதழ் வழங்காமல் இருக்கின்றனர்..
இந்த படத்தை பார்த்த பின் தணிக்கை குழுவினர், சில காட்சிகளை நீக்கினால் யு/ஏ சான்றிதழ் வழங்கப்படும் என கூறினார்கள்.. அவர்கள் அறிவுறுத்திய காட்சிகளை நீக்கியும் இதுவரை தணிக்கை சான்று வழங்கப்படவில்லை.. அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றி இருக்கிறோம். அதிகாரியும் இதனை உறுதி செய்துள்ளார்.
யாரும் இன்னும் படத்தை பார்க்காத நிலையில் சிலர் எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறுகின்றனர்.. யார் வேண்டுமானாலும் படத்திற்கு எதிராக புகார் அளிக்கலாம் என்ற பிரிவு தற்போது நீக்கப்பட்டுள்ளது..” என்று வாதிட்டார்.
தொடர்ந்து தணிக்கை வாரியம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் “ இந்த படத்தில் மத உணர்வுகளை புண்படுத்தக் கூடிய காட்சிகள் இருக்கிறது.. அதன் காரணமாகவே இந்த படம் மறு தணிக்கைக்கு அனுப்பப்பட்டுள்ளது. குறிப்பிட்ட காலக்கட்டத்திற்குள் தங்களுக்கு சான்றிதழ் வழங்க வேண்டும் என எந்த நிர்பந்தமும் செய்ய முடியாது..” என்று தெரிவித்தார்.
இதையடுத்து, ஜனநாயகன் படத்திற்கு எதிராக யார் புகார் அளித்தார்? அந்த புகார் தொடர்பான விவரங்களை நாளைக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தார்.
Read More : Breaking : கரூர் பெருந்துயரம்.. விஜய்க்கு சிபிஐ சம்மன்..! 12-ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவு..!



