காதலனின் மனைவியிடமிருந்து தப்பிக்க 10வது மாடி பால்கனியில் தொங்கிய கள்ளக்காதலி! பின்னர் நடந்தது என்ன? வைரல் வீடியோ..!

viral video n

சமூக ஊடகங்களில் வேகமாக பரவும் ஒரு வீடியோவில், ஒரு பெண் 10-ஆம் மாடி பால்கனியில் தொங்கியடி, தப்பி ஓடுவது போன்ற காட்சி தெரிகிறது. இதை பார்த்தால் இதயத்துடிப்பு கூட அதிகரிக்கிறது. இந்த சம்பவம் சீனாவின் குவாங்டோங் மாகாணத்தில் நடந்ததாக கூறப்படுகிறது.


வீடியோவில், சட்டையில்லாத ஒரு ஆண் ஜன்னல் வழியாக அந்த பெண்மணியிடம் பேசியதை காணலாம். சில நொடிகளில் அவர் காட்சியில் இருந்து மறைந்துவிடுகிறார். இந்த சம்பவம் நவம்பர் 30-ஆம் தேதி நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.அந்த வீடியோவில் இருக்கும் பெண்மணியுடன் கணவன் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. அவரது மனைவி எதிர்பாராத விதமாக வீட்டிற்கு விரைவாக வந்ததால் பீதியடைந்த கணவர், தன்னை மனைவி கண்டுபிடிக்காதவாறு இருக்க, அந்த பெண்மணியை பால்கனிக்கு ஏறி வெளியே நிற்கச் சொல்லியதாக கூறப்படுகிறது.. பின்னர் அந்த பெண், பால்கனியில் இருந்து தொங்கியபடியே இறங்கி மற்றொரு வீட்டின் ஜன்னல் வழியாக உதவி கேட்கிறார்.. உள்ளே இருந்த நபர் அந்த பெண்ணை பத்திரமாக காப்பாற்றுவதை பார்க்க முடிகிறது.

வீடியோவுக்கு நெட்டிசன்களின் ரியாக்‌ஷன்

சமூக ஊடகங்களில் வைரலாகும் அந்த வீடியோவுக்கு பலரும் தங்கள் கருத்துகளை பதிவிட்டுள்ளனர். ஒருவர், “அவர் ஸ்பைடர்மேன் குழுவில் உள்ளவர் போல இருக்கிறார்!” என்று நகைச்சுவையாகக் கருத்து தெரிவித்தார்.

இன்னொரு பயனர், “ப்ளாட் ட்விஸ்ட்: அவளை காப்பாற்றும் நபர், அந்த மனிதனின் மனைவியிடம் ‘சரி, அவள் இங்கே இருக்கிறாள்’ என்று சொல்லி இருப்பார்!” என்று கிண்டலாக குறிப்பிட்டார்.

மூன்றாவது பயனர், “அந்த பெண் இதுபோன்ற அனுபவம் கொண்டவரை போல தெரிகிறார்!” என்று பதிவிட்டார். மற்றொருவர், “ஒரு ஆணுக்காக இப்படிப் பட்ட அவமானகரமான நிலைக்கு நீ உன்னை தள்ளிக் கொள்ள கூடாது. கொஞ்சம் மரியாதை வைக்கவும், மிஸ்…” என்று அறிவுறுத்தும் கோபத்துடன் கருத்து தெரிவித்துள்ளார்.

இத்தகைய கருத்துகளுக்கு நடுவில், இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் பதிவேற்றப்பட்ட சில மணி நேரங்களிலேயே லைக்களை குவித்து வருகிறது..

Read More : சாணக்ய நீதி: திருமணம் செய்யப் போறீங்களா? இந்த பெண்களிடமிருந்து விலகி இருப்பது நல்லது!

RUPA

Next Post

நீருக்குள் இருந்தபடியே அருள் தரும் சிவன்.. வியக்க வைக்கும் வரலாறு..! கண்டிப்பாக பார்க்க வேண்டிய தலம்..

Tue Dec 9 , 2025
Lord Shiva, who gives blessings while being underwater.. Amazing history..!
Bhushavali My Travelogue Vijayalacholeeswararam Pudukottai 3

You May Like