சீனாவில் காதலர்களைத் தாக்கும் புதிய நோய் ஒன்று வெளியுலகத்திற்கு வந்துள்ளது. சீனாவைச் சேர்ந்த ஷியாஹு என்ற 18 வயது பெண் ஒருவர் தன்னுடன் பல்கலைக்கழகத்தில் படித்து வரும் இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இளைஞரும் அவரை காதலித்து வந்த நிலையில் இருவரும் மற்ற காதலர்களைப் போலவே செல்போனில் பேசுவது பல்வேறு இடங்களுக்கு ஒன்றாக சுற்றுலா செல்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்தநிலையில் ஷியாஹுவிற்கு இளைஞர் மீதான காதல் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. […]

சியாச்சின் பனிப்பாறை அருகே சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரில் சீனா சாலை அமைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. அதன் செயற்கைக்கோள் படங்கள் வெளியாகியுள்ளது. உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகள் பட்டியலில் முதல் 2 இடங்களை வகிக்கும் நாடுகளான இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே நீண்ட காலமாக எல்லைப் பிரச்சினை நிலவி வருகிறது. இந்திய பகுதிக்குள் அவ்வப்போது சீனா அத்துமீறி சாலை அமைப்பதும், உள்கட்டமைப்பு பணிகள் செய்ய முயற்சிப்பதும், அதற்கு இந்திய […]

Mount Tai: சீனாவின் தைஷான் பகுதியில் அமைந்துள்ள தாய் மலையில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த மலையின் 6600 படிக்கட்டுகளை ஏற முடியாமல் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் திணறும் காட்சிகள் சமூக வலைதளங்களில் கவனத்தை ஈர்த்திருக்கிறது. சீனாவின் தைஷான் பகுதியில் தாய் மலை(Mount Tai) அமைந்து இருக்கிறது. யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமான தாய் மவுண்ட் 1,545 மீட்டர் உயரத்தில் உள்ளது. இந்த […]

சீன அரசாங்கத்தின் உத்தரவின் பேரில் சீனாவில் உள்ள அதன் ஆப் ஸ்டோரில் இருந்து மெட்டா பிளாட்ஃபார்ம்களின் வாட்ஸ்அப் மற்றும் த்ரெட்ஸ்-யை அகற்றியதாக ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது. தேசிய பாதுகாப்புக் கவலைகளை மேற்கோள் காட்டி சீன அரசாங்கத்தால் செயலியை நீக்க உத்தரவிடப்பட்டதால், சீனாவில் உள்ள அதன் ஆப் ஸ்டோரில் இருந்து மெட்டா பிளாட்ஃபார்ம்களின் வாட்ஸ்அப் மற்றும் த்ரெட்ஸ்யை அகற்றியுள்ளதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஆப்பிள் நிறுவனம் அளித்த செய்தி அறிக்கையில், ” […]

USA: அருணாச்சலப் பிரதேசத்தின் பெயர்களை மாற்றி விவகாரத்தில் அமெரிக்கா, சீனா அரசை கடுமையாக விமர்சித்துள்ளது. இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாச்சலப் பிரதேசத்தின் அப்போது இடங்களுக்கு சீனா பெயரிட்ட விவகாரம் தொடர்பாக அமெரிக்கா தனது கண்டனத்தை பதிவு செய்திருக்கிறது. சீனா அரசு தங்களது பிராந்திய உரிமைக் கோரளுக்காக ஒருதலைபட்சமான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக பைடன் அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. ராணுவம் அல்லது பொதுமக்கள் எல்லை கட்டுப்பாட்டு கோடு மூலமாக ஊடுருவுதல் அல்லது அத்துமீறல்கள் […]

இந்தியாவை விட சீனாவுக்கே முதல் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு கூறியதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். அகமதாபாத்தில் நடைபெற்ற தொழில் மற்றும் வர்த்தக சபை கூட்டத்தில் மத்திய அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு, இந்தியாவை விட சீனாவுக்கு முன்னுரிமை அளிக்கும் நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார். 1950-ல், உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் […]

அருணாச்சல பிரதேசத்தில் உள்ள ஊர்கள், மலைகளுக்கு சீன மொழிப் பெயர்களை சீன அரசு சூட்டியுள்ளது. அருணாச்சல பிரதேசத்தை சீனா உரிமை கொண்டாடுவதற்கு மத்திய அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், மீண்டும் இவ்விவகாரம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அருணாச்சல பிரதேசத்தில் இருக்கும் 11 குடியிருப்புப் பகுதிகள், 12 மலைகள், 4 ஆறுகள், ஒரு ஏரி, ஒரு மலைப்பாதை என 30 பெயர்கள் சீன மொழியின் எழுத்துக்களிலும், திபெத்திய மொழியிலும் புதிய […]

Tail: சீனாவில் முதுகு தண்டுவடத்தில் நரம்பியல் கோளாறு காரணமாக வாலுடன் பிறந்த ஆண் குழந்தையை பார்த்து மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர். சீனாவில் கடந்த வாரம் பெண் ஒருவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையை பார்த்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஏனெனில் குழந்தையின் பின் பகுதியில் 10 செமீ (4 அங்குலம்) வால் உள்ளது. மருத்துவர்கள் இந்த வாலை இணைக்கப்பட்ட முள்ளந்தண்டு வடம் என்று அழைக்கிறார்கள். அதாவது, முதுகுத் தண்டுவடத்தில் […]

தோல் வர்த்தகத்திற்காக, ஒவ்வொரு ஆண்டும் 60 லட்சம் கழுதைகள் கொல்லப்படுகின்றன. கழுதையின் தோல்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும், பாரம்பரிய சீன மருத்துவ தீர்வான எஜியாவோவுக்கான இது செய்யப்படுவதாக கழுதை சரணாலயத்தின் சமீபத்திய அறிக்கை தெரிவித்தது. சீனாவில் தோல் மற்றும் ரத்தம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு செய்யப்படும் மருந்துகளின் மூலப்பொருள், கழுதையின் தோல்களில் இருந்து பெறப்படுகிறது. இதற்கு எஜியாவோ (Ejiao) என்று பெயரிடப்பட்டுள்ளது. கழுதையின் தோலில் இருந்து பெறப்படும் ஜெலட்டினை வைத்து, முகத்திற்கான கிரீம்கள், […]

செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் தற்போது உலகில் பல மாற்றங்களை புரிந்து வருகிறது. மனிதனின் வேலைகளை குறைப்பதோடு, மருத்துவம், கல்வி, தொழில்நுட்பம் என்ற பலவற்றிலும் முன்னேற்றங்களை கொண்டு வருகிறது. சைபர் குற்றங்களும் AI மூலமாக பெருகி வருவதை நாம் காண்கிறோம். AI பலரது வாழ்வில் ஒரு முக்கிய அங்கமாக இருக்கிறது. டூஃபெய் (25) என்ற சீனப் பெண் AI chat bot உடன் காதல் வயப்பட்டுள்ளார். ஒரு ஆணிடம் […]