மத்திய பாதுகாப்பு படையில் வேலை.. 81 ஆயிரம் சம்பளம்..! நல்ல சான்ஸ்.. விட்றாதீங்க!

Govt Job 2025

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் எல்லை பாதுகாப்பு படை பிரிவான சாஸ்த்ரா சீமா பால் (எஸ்.எஸ்.பி)யில் காலியாக உள்ள தலைமைக் காவலர் (Head Constable) பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.


காலிப்பணியிடங்கள்: 233

தலைமைக் காவலர் (Steward) – 02
தலைமைக் காவலர் (Communication)) – 197
தலைமைக் காவலர் (மின்பணியாளர்) – 29
தலைமைக் காவலர் (கால்நடை மருத்துவம்) – 05

கல்வித்தகுதி:

தலைமைக் காவலர் (Head Constable) பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் குறைந்தபட்சம் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், சம்பந்தப்பட்ட துறை சார்ந்த பிரிவில் டிப்ளமோ படிப்பு முடித்திருக்க வேண்டும்.

ஸ்டிவார்டு (Steward) பணிக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு குறைந்தபட்சம் ஒரு ஆண்டு பணி அனுபவம் அவசியமாகும். குறிப்பாக, 100 படுக்கைகள் அல்லது அதற்கு மேற்பட்ட வசதிகள் கொண்ட மருத்துவமனையில் குறைந்தது ஓராண்டு பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும்.

கம்யூனிகேஷன் (Communication) பிரிவு பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் எலக்ட்ரானிக்ஸ், கம்யூனிகேஷன்ஸ் அல்லது கணினி அறிவியல் போன்ற தொடர்புடைய பாடப்பிரிவுகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 வயது முதல் 27 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிமுறைகளை பின்பற்றி வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும். எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் , பொதுப்பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது உச்ச வரம்பில் சலுகைகள் அளிக்க வேண்டும்.

சம்பளம்: அறிவிப்பின்படி, தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மத்திய அரசின் 7-வது ஊதிய கமிஷன் (7th Pay Commission) லெவல்–4 அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும். இதன் படி, மாத சம்பளம் ரூ.25,500 முதல் ரூ.81,100 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை: தேர்வு நடைமுறையைப் பொருத்தவரை, பல கட்டங்களின் மூலம் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். முதலில் உடல் தகுதி தேர்வு (Physical Efficiency Test) மற்றும் உடல் அளவீட்டு தேர்வு (Physical Standard Test) நடத்தப்படும். அதனைத் தொடர்ந்து கணினி வழி தகுதி தேர்வு (Computer Based Test) நடைபெறும்.

மேலும், குறிப்பிட்ட பணியிடங்களுக்கான திறன் தேர்வு (Skill Test), சான்றிதழ் சரிபார்ப்பு (Document Verification) மற்றும் மருத்துவ பரிசோதனை (Medical Examination) ஆகிய கட்டங்களும் இடம்பெறும். அனைத்து கட்டங்களிலும் தகுதி பெற்றவர்கள் மட்டுமே இறுதியாக பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 20.04.2026.

Read more: “திமுக தேர்தல் அறிக்கை கதாநாயகன் அல்ல, காமெடியன்.. வில்லன்..” விளாசிய அன்புமணி..!

English Summary

A new employment notification has been issued to fill the vacant posts of Head Constable in the Border Security Force.

Next Post

அமைதியாய் உடலை சிதைக்கும் வெயில்.. தப்பிக்க என்ன செய்யலாம்..? மருத்துவர் கூறும் தீர்வு!

Mon Mar 30 , 2026
The sun is silently destroying the body.. What can we do to escape..? Doctor gives warning!
japan heatwave

You May Like