2026 சட்டமன்ற தேர்தலை குறி வைத்து, ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்‘ என்ற பெயரில், நேற்று முதல் ஜூலை 23-ம் தேதி வரை கொங்கு மண்டலம், வட மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மக்களை சந்தித்து பிரசாரம் மேற்கொள்கிறார்.
முதற்கட்டமாக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் தனது சுற்றுப்பயணத்தை தொடங்கினார். மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற பிரசார பயண தொடக்க நிகழ்விற்கு, பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி, பாஜக தமிழ்நாடு தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணை அமைச்சர் எல். முருகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
தேர்தல் பரப்புரையை தொடங்கிய எடப்பாடி பழனிச்சாமி கூட்டணியையும் விரைவில் இறுதி செய்யத் தீவிரம் காட்டியுள்ளார். தற்போது பாஜக, அமமுக, இந்தியக் குடியரசு கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சி, புரட்சி பாரதம் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளது, நேற்றைய தினம் புதிதாக இந்திய ஜனநாயக கட்சி கூட்டணியில் இணைந்துள்ளது. சட்டமன்ற தேர்ந்த நெருங்கும் சூழலில் பாமக, தேமுதிக தங்களது நிலைபாட்டை இன்னும் உறுதி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தகக்து.