மேற்கு வங்காளம், நாடியா மாவட்டத்தில், நவத்வீப் பகுதியில் நடந்த ஒரு சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியிலும், ஆச்சரியத்திலும் ஆழ்த்தியுள்ளது. அங்கு பிறந்த சில மணி நேரமே ஆன பச்சிளம் குழந்தை ஒன்று ரயில்வே ஊழியர்கள் வசிக்கும் குடியிருப்பின் ஒரு கழிப்பறை அருகே, குளிரான தரையில் தனியாக விடப்பட்டிருந்தது. குழந்தையின் உடலில் இன்னும் பிறப்பின் ரத்தக்கறைகள் இருந்தன. ஆனால் அந்த குழந்தைக்கு தெருநாய்கள் “பாதுகாவலர்களாக” மாறிய சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது..
குழந்தையைச் சுற்றி தெருநாய்கள் வளையமாக நின்று பாதுகாப்பு வட்டம் அமைத்திருந்தன. அவை குரைக்கவும் இல்லை, அசால்ட்டாக ஓடவும் இல்லை என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.. மேலும் குழந்தைக்கு எந்த ஆபத்தும் வரக்கூடாதென இரவு முழுவதும் கண்காணித்து நின்றன அவர்கல் தெரிவித்துள்ளனர்..
அந்த நாய்கள், இரவு முழுவதும் குழந்தையைக் காக்கும் அமைதியான காவலர்களைப் போன்றிருந்தன. காலை வரை குழந்தையை விட்டு அந்த நாய்கள் நகரவில்லை என அப்பகுதி மக்கள் கூறினர். இந்த சம்பவத்தை “நம்ப முடியாத அதிசயம் என்று பொதுமக்கள் பேசி வருகின்றனர்..
ரயில்வே குடியிருப்பில் வசிக்கும் ஒருவரே காலை முதலில் குழந்தையை கவனித்தார். அவர் நாய்கள் சுற்றி நின்றிருந்த அந்த வளையத்திற்குள் மெதுவாக நெருங்கினார். சுக்லா மெதுவாக அவர்களை நோக்கி சென்றபோது, மென்மையாகப் பேசி நிதானமாக கையை நீட்டியபோது தான், அந்த நாய்கள் தங்கள் பாதுகாப்பு வளையத்தை ஓரளவு தளர்த்தின. உடனே அவர் தனது துண்டில் பச்சிளம் குழந்தை போர்த்தி, அயல் வீட்டாரிடம் உதவி கோரினார். உடனடியாக குழந்தை முதலில் மஹேஷ்கஞ்ச் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கிருந்து மேலும் சிறந்த பராமரிப்பு தேவைப்படுவதால் கிருஷ்ணசாதர் மருத்துவமனைக்கு குழந்தை மாற்றப்பட்டுள்ளது.
அந்த பகுதியில் வசிக்கும் சுக்லா மொண்டால் இதுகுறித்து பேசிய போது “காலை எழுந்தபோது பார்த்த காட்சி இன்னும் எங்களை நடுங்க வைக்கிறது. நாய்கள் ஆக்ரோஷமாக இல்லை. அவை… எச்சரிக்கையுடன் இருந்தன. குழந்தை உயிர் காக்கப் போராடிக் கொண்டிருக்கிறதை அவை புரிந்துகொண்டதுபோல் இருந்தது.” என்று கூறினார்..
அந்த நாய்களின் நடத்தை அங்கிருந்த அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. அவை ஒரு மனிதக் குழந்தையை பாதுகாக்கும் காவலர்களைப் போல அமைதியாகவும் கவனமாகவும் நின்றிருந்தன என்றும் அவர் தெரிவித்தார்..
குழந்தைக்கு எந்த காயமும் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.. தலைப்பகுதியில் இருந்த இரத்தம் பிறப்பின்போதே இருந்தது, அதாவது குழந்தையைப் பிறந்த சில நிமிடங்களுக்குப் பிறகே யாரோ அங்கு விட்டு சென்றுள்ளனர் என்றும் அவர்கள் தெரிவித்தனர்..
இரவு நேரத்தை பயன்படுத்தி, அந்த பகுதியிலேயே வசிப்பவர்களில் யாரோ குழந்தையை அங்கு விட்டுச் சென்றிருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்… காவல்துறையினரும் குழந்தைகள் பாதுகாப்பு (Child Help) அதிகாரிகளும் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். மேலும், குழந்தையின் நீண்டகால பராமரிப்பு மற்றும் பாதுகாப்புக்கான சட்டநடைமுறைகளும் தொடங்கப்பட்டுள்ளன..
நவத்வீப் பகுதியில் வசிக்கும் வயதானவர்கள், இத்தகைய கருணை நிறைந்த சம்பவங்கள் அங்கே புதியதல்ல என்று கூறுகிறார்கள். 15ஆம் நூற்றாண்டு பக்த ஸ்ரீ சைதன்ய மகாபிரபுவின் உபதேசங்களால் தங்கள் மனிதநேய உணர்வால் சூழப்பட்டிருந்தது என்று அவர்கள் நம்புகிறார்கள். இவர் பிறந்த இந்த புனித நகரத்தின் கடைகள் மற்றும் கோவில்களில் கருணை, பரிவு ஆகியவற்றின் செய்தி இன்னும் ஒலிக்கிறது. ஒரு வயதானவர் இதுகுறித்து பேசிய போது “அந்த கருணையின் ஆவி இந்த மிருகங்களின் வழியே செயல்பட்டிருக்கலாம்,” என்று குறிப்பிட்டார்.
Read More : சித்திரவதை செய்த காதல் கணவன்.. பாத்ரூமில் இளம்பெண்.. எந்த பெற்றோரும் பார்க்கக் கூடாத கோலம்..!!



