சென்னை ஹைகோர்ட்டில் வேலை.. மாதம் ரூ. 50 ஆயிரம் சம்பளம்.. யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும்..? விவரம் இதோ..

job

சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆய்வு சட்ட உதவியாளர் பிரிவில் (Madras High Court Research Law Assistant) மொத்தம் 28 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சட்டம் படித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.


பதவியின் பெயர் – ஆய்வு சட்ட உதவியாளர்

பணி விவரம்: தேர்வாகும் நபர்களுக்கு முழு நேர பணி. நீதிமன்ற பணிகள் மட்டுமின்றி, நிர்வாகப் பணிகளிலும் ஈடுபட வேண்டும். நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் வழக்குகள், ஆய்வுப் பணி, நீதிபதிகளுக்கு உதவியாக இருப்பது மற்றும் நீதிபதிகள் வழங்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

வயது வரம்பு: விண்ணப்பதார்கள் ஜூலை 1-ம் தேதியின் படி, 30 வயதை நிறைந்திருக்கக்கூடாது.

கல்வித்தகுதி:

* அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து சட்டத்தில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

* 10+2+3+3 அல்லது 10+2+5 அல்லது 10+2+4+3 என்ற அடிப்படையில் கல்வித்தகுதியை பெற்றிருக்க வேண்டும்.

* கல்லூரி நேரத்திலேயே அனைத்து பருவத்தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

* கடந்த 5 கல்வி ஆண்டில் டிகிரி முடித்தவராக இருக்க வேண்டும். முதுகலை அல்லது அதற்கு மேற்ப்பட்ட படிப்புகளை தொடர்பவர்கள் விண்ணப்பிக்க இயலாது.

தேர்வு செய்யப்படும் முறை: சென்னை அல்லது மதுரையில் வைவா நடத்தப்படும். அதன் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வாகும் நபர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அல்லது மதுரை உயர்நீதிமன்ற கிளையில் 1 வருடத்திற்கு நியமனம் செய்யப்படுவார்கள்.

சம்பளம்: ஆய்வு சட்ட உதவியாளர் பதவியில் தேர்வாகும் நபர்களுக்கு தொகுப்பூதியமாக மாதம் ரூ.50,000 வழங்கப்படும்.

எப்படி விண்ணப்பிப்பது? உயர்நீதிமன்றத்தில் உள்ள இப்பணியிடங்களுக்கு ஆர்வமாக உள்ளவர்கள் https://www.mhc.tn.gov.in/recruitment/ என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

முகவரி: The Registrar General, High Court, Madras-600 104.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.12.2025.

Read more: தகுதி இருந்தாலும் இவர்களுக்கு ரூ. 1000 கிடைக்காது.. மகளிர் உரிமைத்தொகை மேஜர் அப்டேட்..!

English Summary

A notification has been issued for 28 vacancies in the Research Legal Assistant category in the Madras High Court.

Next Post

புடின் ஏன் இவ்வளவு பயப்படுகிறார்? பாதுகாவலர்கள் ஏன் அவரது மலத்தை கூட சேகரிக்கின்றனர்?

Thu Dec 4 , 2025
This post will take a detailed look at the actual security measures provided to Russian President Putin.
putin poop suitcase

You May Like