ரூ.1,40,000 சம்பளம்.. மத்திய அரசு நிறுவனத்தில் வேலை..!! விண்ணப்பிக்க ரெடியா..?

job2

மத்திய அரசின் கப்பல் கட்டும் நிறுவனமான கோவா ஷிப்யார்ட் நிறுவனத்தில் காலியாக உள்ள மேனேஜ்மெண்ட் டிரைய்னி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிறுவனத்தில் மேனேஜ்மெண்ட் டிரைய்னி பதவிக்கு 32 காலிப்பணியிடங்கள் உள்ளன.


பணியிட விவரம்:

மெக்கானிக்கல் 9
எலெக்ட்ரிக்கல் 5
எலெக்ட்ரானிக்ஸ் 2
நாவல் கட்டடக்கலை 12
நிதி 2
ரோபாட்டிஸ் 2

வயது வரம்பு: அதிகபடியான வயது வரம்பு 28 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவே ஒபிசி பிரிவினருக்கு 31 வயது வரையும், எஸ்சி, எஸ்டி பிரிவினர் 33 வயது வரையும் விண்ணப்பிக்கலாம்.

கல்வித்தகுதி: இளங்கலை தொழில்நுட்ப பட்டப்படிப்பு (B.E/B.Tech). கீழ்கண்ட துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்:

  • மெக்கானிக்கல் இன்ஜினியரிங்
  • எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்
  • எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்
  • நாவல் ஆர்கிடெக்சர் (Naval Architecture)
  • ரோபாட்டிக்ஸ்

குறைந்தபட்சம் முதல் வகுப்பு அல்லது 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேற்கண்டவற்றுக்கு நிகரான பிற தொழில்நுட்ப பிரிவுகளிலும் பொறியியல் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். கூடுதலாக CA (Chartered Accountant) அல்லது ICMA (Institute of Cost and Management Accountants) தகுதி பெற்றிருக்க வேண்டும். புதியவர்கள் (Freshers) விண்ணப்பிக்கலாம்

எந்த பணியிடத்திற்கும் முன்னாள் பணியாற்றிய அனுபவம் தேவையில்லை. தற்போது இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களும், முதுகலை பட்டப்படிப்பு முடித்தவர்களும் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.

சம்பளம்: கோவா ஷிப்யார்ட் நிறுவனத்தில் உள்ள இப்பணியிடங்களுக்கு மாதம் ரூ.40,000 முதல் அதிகபடியாக ரூ.1,40,000 வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பித்தவர்களில் தகுதியானவர்கள் பின்வரும் கட்டங்களில் தேர்வு செய்யப்படுவார்கள்:

  • எழுத்துத் தேர்வு (Written Test)
  • சான்றிதழ் சரிபார்ப்பு (Document Verification)
  • நேர்காணல் (Interview)

எழுத்துத் தேர்வு

  • தேர்வு கணினி வழியாக (Online CBT) அல்லது பேனா–பேப்பர் முறையில் நடத்தப்படும்.
  • தேர்வில் திறன் சோதனை மற்றும் திறனறிவு கேள்விகள் இடம்பெறும்.
  • மொத்த மதிப்பெண்கள்: 85.
  • கேள்விகள் பல்வேறு தேர்வுகள் (MCQ) வடிவில் அமையும்.
  • மொழிகள்: ஆங்கிலம் மற்றும் இந்தி.

தகுதி பெற வேண்டிய குறைந்தபட்ச மதிப்பெண்கள்:

  • பொதுப் பிரிவு (UR) மற்றும் EWS தேர்வர்கள் → 50%
  • SC, ST, OBC மற்றும் மாற்றுத்திறனாளிகள் → 45%

சான்றிதழ் சரிபார்ப்பு

  • எழுத்துத் தேர்வில் தகுதி பெற்றவர்கள் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்படுவார்கள்.

நேர்காணல்: நேர்காணல் 15 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதில் பொதுப் பிரிவு மற்றும் EWS தேர்வர்கள் 50% மதிப்பெண்களும், பிறர் 45% மதிப்பெண்களும் பெற வேண்டும். எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணலில் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்ர்வு செய்யப்படும் நபர்கள் 1 வருடத்திற்கு பயிற்சியில் ஈடுபடுத்தப்படுவார்கள். பயிற்சிக்கு பின்னர் உதவி மேனேஜர் பதவி வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆர்வமுள்ளவர்கள் https://recruitment.goashipyard.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.

கடைசி தேதி: செப்டம்பர் 24 வரை விண்ணப்பிக்கலாம்.

Read more: உலகளவில் அதிக வசூல் செய்த ரஜினி படங்கள்: 3வது இடத்தில் கூலி; 7 ஆண்டுகளாக முதலிடத்தில் உள்ள படம் இது தான்!

English Summary

A notification has been issued for the vacant posts in the Central Government Goa Shipyard Company.

Next Post

ஒரே சார்ஜில் அதிக தூரம் போகணுமா? அப்ப இந்த 5 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தான் பெஸ்ட் சாய்ஸ்!

Wed Aug 27 , 2025
குறைந்த செலவில் பயணிக்க வேண்டும் என்பதே அனைத்து வாகன ஓட்டிகளின் விருப்பமாகும்.. ஆனால் பெட்ரோல் டீசலி விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வருகிறது.. அதனால்தான் பல வாடிக்கையாளர்களும் மின்சார ஸ்கூட்டர்களால் ஈர்க்கப்படுகிறார்கள். நீங்களும் அத்தகைய மாறுபாட்டைத் தேடுகிறீர்களானால், ஒரே சார்ஜில் அதிக ரேஞ்சை வழங்கும் சிறந்த எலக்ட்ரிக் EV ஸ்கூட்டர்களின் பட்டியல் இதோ… ஓலா S1 ப்ரோ – இந்தப் பட்டியலில் முதலில் இருப்பது ஓலா S1 ப்ரோ. […]
Ather Rizta

You May Like