இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 2,569 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணியிடங்களுக்கு பொறியியல் டிப்ளமோ, டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணியிட விவரம்:
காலிப்பணியிடங்கள்: 2569
பணியிடங்கள்: ஜூனியர் இன்ஜினியர், டிப்போ பொருள் கண்காணிப்பாளர் மற்றும் வேதியியல், உலோகவியல் உதவியாளர்
வயது வரம்பு:
பொது பிரிவு: 18 முதல் 33 வயது வரை
OBC: அதிகபட்சம் 36 வயது வரை
SC/ST: அதிகபட்சம் 38 வயது வரை
கல்வித்தகுதி:
ஜூனியர் இன்ஜினியர் (JE): மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், சிவில், உற்பத்தி, தொழிற்சாலை மிஷின், இன்ஸ்ரூமெண்டேஷன், ஆட்டோமொபைல் உள்ளிட்ட பல்வேறு பொறியியல் துறைகளில் 3 ஆண்டு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
டிப்போ பொருள் கண்காணிப்பாளர்: ஏதேனும் ஒரு பொறியியல் பாடப்பிரிவில் 3 ஆண்டு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
வேதியியல் மற்றும் உலோகவியல் உதவியாளர்: இயற்பியல் அல்லது வேதியியல் பாடங்களில் B.Sc (அறிவியல் இளங்கலை) பட்டம் 45% மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரயில்வேயில் இப்பணியிடங்களுக்கு தேர்வாகும் நபர்களுக்கு 7வது ஊதிய குழுவின் அடிப்படையில் நிலை 6 கீழ் ரூ.35,400 தொடக்க சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை: இப்பணியிடங்களுக்கு இரு கட்ட கணினி வழி தேர்வு (CBT) நடைபெறும்:
முதல் கட்டம் (CBT – 1):
மொத்தம் 100 மதிப்பெண்கள்
பாடங்கள்:
- கணிதம்
- பொது விழிப்புணர்வு
- பொது அறிவு
- பொது அறிவியல்
இரண்டாம் கட்டம் (CBT – 2):
மொத்தம் 150 மதிப்பெண்கள்
பாடங்கள்:
- பொது விழிப்புணர்வு
- இயற்பியல் மற்றும் வேதியியல்
- கணினி பயன்பாடு
- சுற்றுச்சூழல் அறிவு
- தொழில்நுட்ப திறன் (Technical Ability)
இதில் தேர்ச்சி பெறும் விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் மருத்துவ பரிசோதனை கட்டங்களை முடித்த பின் பணியில் நியமிக்கப்படுவார்கள்.
எப்படி விண்ணப்பிப்பது? ரயில்வே ஜூனியர் இன்ஜினியர் பதவிக்கு தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் https://www.rrbchennai.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.
கடைசி தேதி: விண்ணப்பம் அக்டோபர் 31-ம் தேதி தொடங்கிய நிலையில், நவம்பர் 30 வரை விண்ணப்பிக்கலாம்.



