மாவட்ட சுகாதாரத்துறையில் கொட்டிக்கிடைக்கும் வேலைவாய்ப்பு.. ரூ.40,000 சம்பளம்..! உடனே விண்ணப்பிங்க..

job

திருவண்ணாமலை மாவட்டத்தில் சுகாதாரத்துறையின் கீழ் உள்ள ஏராளமான காலிப்பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.


பணியிட விவரம் மற்றும் சம்பளம்:

* யோகா மற்றும் இயற்கை மருத்துவ ஆலோசகர் பணியிடத்திற்கு 3 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.40,000 சம்பளம் வழங்கப்படும்.

* உதவியாளர் / பல்நோக்கு பணியாளர் பதவிக்கு 34 காலியிடங்கள் உள்ளன. இப்பதவிக்கு மாதம் ரூ.8,950 சம்பளமாக வழங்கப்படும்.

* பார்மசி பதவிக்கு 1 காலியிடம் அறிவிக்கப்பட்டு, மாதம் ரூ.15,000 சம்பளம் வழங்கப்படுகிறது.

* நர்சிங் தெரபிஸ்ட் பதவிக்கு 26 காலியிடங்கள் உள்ளன. இப்பணிக்கு மாதம் ரூ.13,000 சம்பளம் வழங்கப்படும்.

* பல் மருத்துவர் பதவிக்கு 2 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்வாகுபவர்களுக்கு மாதம் ரூ.34,000 சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

* பல் மருத்துவ உதவியாளர் பதவிக்கு 2 காலியிடங்கள் உள்ளன. இதற்கு மாதம் ரூ.13,800 சம்பளம் வழங்கப்படும்.

* முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் பதவிக்கு 2 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இப்பதவிக்கான சம்பள விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

* மேலும், ICTC ஆலோசகர் பதவிக்கு 9 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டு, மாதம் ரூ.18,000 சம்பளம் வழங்கப்படும்.

கல்வித்தகுதி:

  • ஆலோசகர் பதவிக்கு யோகா மற்றும் இயற்கை மருத்துவத்திற்கான BNYS முடித்திருக்க வேண்டும்.
  • உதவியாளர் பதவிக்கு 8ஆம் வகுப்பு தகுதிப் பெற்றிருக்க வேண்டும்.
  • பார்மசிஸ்ட் பதவிக்கு ஆயுஷ் பார்மசிஸ்ட் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
  • நர்சிங் தெரபிஸ்ட் பதவிக்கு அதற்கான டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
  • பல் மருத்துவர் பதவிக்கு BDS முடித்திருக்க வேண்டும்.
  • பல் மருத்துவ உதவியாளர் பதவிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன், பல் மருத்துவ டெக்னீஷியன் சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
  • முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் பதவிக்கு மேல்நிலை பள்ளிப் படிப்பு இளங்கலை பட்டப்படிப்பு அல்லது சுகாதார ஆய்வாளர் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
  • ICTC ஆலோசகர் பதவிக்கு உளவியல், சமூகப் பணி, சமூகவியல், மனுடவியல், மனித மேம்பாடு அல்லது நர்சிங் டிப்ளமோவில் 3 ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

எப்படி விண்ணப்பிப்பது? திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள இப்பணியிடங்களுக்கு https://tiruvannamalai.nic.in/ என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பப்படிவத்தைக் கொண்டு தபால் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ அனுப்பி விண்ணப்பிக்கலாம்.

முகவரி: செயல்பாட்டு செயலாளர்/ மாவட்ட சுகாதார அலுவலர்,
மாவட்ட நலவாழ்வு சங்கம்,
மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகம்,
பழைய அரசு மருத்துவமனை வளாகம், செங்கம் சாலை,
திருவண்ணாமலை.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 22.12.2025 மாலை 5 மணி வரை.

Read more: இரத்த அழுத்தம் முதல் நீரிழிவு நோய் வரை.. பல நோய்களுக்கு இந்த காய்கறி தான் ஒரே தீர்வு..!

English Summary

A notification has been issued to fill numerous vacant positions under the Health Department in the Tiruvannamalai district.

Next Post

வீட்டு வைத்தியம் மூலம் 2 மடங்கு உடல் எடையை குறைக்கலாம்..!! இந்த ஒரு பானம் போதும்..!!

Sun Dec 14 , 2025
இன்றைய பரபரப்பான நவீன வாழ்க்கைமுறையில், உடல்நலத்தில் கவனம் செலுத்தப் போதுமான நேரம் இல்லாததால், உடல் பருமன் (எடை அதிகரிப்பு) ஒரு பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. குறிப்பாக, காலை முதல் மாலை வரை அலுவலகத்தில் ஒரே இடத்தில் அமர்ந்து பணிபுரியும் நபர்களுக்கு, உடல் செயல்பாடு குறைவு மற்றும் சத்தான உணவுப் பழக்கம் இல்லாததால், இந்தப் பிரச்சனை கணிசமாக அதிகரிக்கிறது. உடல் எடையைக் குறைக்க ஜிம் சென்று கடுமையான உடற்பயிற்சிகள் செய்வது அல்லது […]
Weight Loss 2025

You May Like