தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் சென்னை நங்கநல்லூரியில் அமைந்துள்ள ஆதிவ்யாதிஹர பக்த ஆஞ்சநேயர் திருக்கோயிலில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
காலிப்பணியிடங்கள்: 4
பணியிட விவரங்கள்:
தட்டச்சர் – 1
பிளம்பர் – 1
அலுவலக உதவியாளர் – 1
மின்பணியாளர் – 1
வயது வரம்பு: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 01.07.2025 தேதியின்படி குறைந்தது 18 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு 45 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி:
தட்டச்சர்:
* 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
* தட்டச்சில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் முதுநிலை அல்லது தமிழில் முதுநிலை, ஆங்கிலத்தில் இளநிலை அல்லது ஆங்கிலத்தில் முதுநிலை, தமிழில் இளநிலை பெற்றிருக்க வேண்டும்.
* மேலும், கணினி பயன்பாடு மற்றும் அலுவலக தானியக்கம் தொடர்பான சான்றிதழ் அவசியம்.
பிளம்பர்: சம்பந்தப்பட்ட தொழிலில் ஐடிஐ (ITI) தகுதி பெற்றிருக்க வேண்டும்.
அலுவலக உதவியாளர்: 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மின்பணியாளர்: ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், மின்சார உரிம வாரியத்தால் வழங்கப்பட்ட ‘பி’ சான்றிதழ் பெற்றவராக இருக்க வேண்டும்.
சம்பளம்:
தட்டச்சர் பதவிக்கு ரூ.15,300 முதல் ரூ.48,700 வரை சம்பளம் வழங்கப்படும்.
பிளம்பர், அலுவலக உதவியாளர் மற்றும் மின்பணியாளர் பதவிகளுக்கு ரூ.12,600 முதல் ரூ.39,900 வரை சம்பளம் வழங்கப்படும்.
எப்படி விண்ணப்பிப்பது? தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் https://hrce.tn.gov.in/ என்ற இணையதளத்தில் இப்பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்பத்தை நிரப்பி தேவையான ஆவணங்களின் நகல்களுடன் இணைத்து அந்தந்த கோயில் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.
இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்:
- கல்வித்தகுதி சான்றிதழ்களின் நகல்கள்
- வகுப்பு சான்றிதழ்
- குடும்ப அடையாள அட்டை நகல்
- முன்னுரிமைக்கான சான்றிதழ் நகல்
- ஆதார் அட்டை நகல்
- வேலைவாய்ப்பு பதிவு அட்டை நகல்
- இருப்பிட சான்றிதழ்
- நன்னடத்தை சான்றிதழ்
- சுயவிலாசமிட்ட ரூ.25-க்கான தபால் தலையுடன் கூடிய உறை
கடைசி தேதி: 20.01.2026 மாலை 5.45 மணி வரை
Read more: 21-Day Walking Challenge: நிமிடத்திற்கு 100 அடிகள்.. உடல் மாற்றத்தை நீங்களே உணர்வீர்கள்!



