தமிழக ஊராட்சித் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு.. ரூ.71,900 வரை சம்பளம்..!! செம சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க..

job

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் மாவட்ட வாரியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு தற்போது ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.


நிரப்பப்படும் பணியிடங்கள்: ஊராட்சி ஒன்றியங்களின் கீழ் ஈப்பு ஓட்டுநர், அலுவலக உதவியாளர், பதிவறை எழுத்தர் மற்றும் இரவு காவலர் போன்ற பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

வயது வரம்பு:

* அலுவலக உதவியாளர், பதிவறை எழுத்தர், இரவு காவலர் ஆகிய பதவிகளுக்கு 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். அதிகபட்சமாக பொது பிரிவினர் 32 வரையும், பிசி/எம்பிசி பிரிவினர் 34 வரையும் மற்றும் எஸ்சி, எஸ்டி பிரிவினர் 37 வயது வரையும் இருக்கலாம்.

* ஈப்பு ஓட்டுநர் பதவிக்கு 18 – 32 வரையும், பிசி, எம்பிசி பிரிவினருக்கு 34 வரையும், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 42 வரையும் இருக்கலாம்.

கல்வித்தகுதி:

* அலுவலக உதவியாளர் பதவிக்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மிதிவண்டி ஓட்டத் தெரிந்தவராக இருக்க வேண்டும்.

* பதிவறை எழுத்தர் பதவிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

* இரவு காவலர் பதவிக்கு தமிழில் எழுதப் படிக்க தெரிந்தவராக இருக்க வேண்டும்.

* ஈப்பு காவலர் பதவிக்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். மேலும் 5 ஆண்டுகளுக்கு குறையாமல் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பள விவரம்:

* அலுவலக உதவியாளர் பதவிக்கு நிலை 1 கீழ் ரூ.15,700 முதல் ரூ.58,100 வரை மாத சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

* பதிவறை எழுத்தர் பதவிக்கு மாதம் ரூ.15,900 முதல் ரூ.50,400 வரை சம்பளம் வழங்கப்படும்.

* இரவு காவலர் பதவிக்கு நிலை 1 கீழ் ரூ.15,700 முதல் ரூ.58,100 வரை சம்பளம் வழங்கப்படும்.

* ஈப்பு ஓட்டுநர் பதவிக்கு நிலை 8 கீழ் ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பிப்பது எப்படி? ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் கீழ் காலியாக உள்ள இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://www.tnrd.tn.gov.in/ என்ற இணையதளத்தில் நேரடியாக ஆன்லைன் வழியாக மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.50 செலுத்த வேண்டும்.

மாவட்ட வாரியாக காலிப்பணியிடங்களை அறிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

கடைசி தேதி: செப்டம்பர் 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். 

Read more: #Breaking : வரலாறு காணாத புதிய உச்சம்.. ரூ.78,000-ஐ தாண்டியது தங்கம் விலை.. நகைப்பிரியர்களுக்கு பேரிடி..

English Summary

A notification has been issued to fill various district-wise vacancies under the Tamil Nadu Panchayat Department.

Next Post

உங்கள் வங்கி லாக்கர் சீல் வைக்கப்படலாம்! ரிசர்வ் வங்கி அதிரடி முடிவு! முழு விவரம் இதோ..

Wed Sep 3 , 2025
நீங்கள் நகைகள் அல்லது விலைமதிப்பற்ற பொருட்களை வைத்திருக்க வங்கியில் லாக்கரை வாடகைக்கு எடுத்திருந்தால், இந்த செய்தி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். கடந்த சில ஆண்டுகளாக, ரிசர்வ் வங்கி (RBI) வங்கி லாக்கர்கள் தொடர்பான விதிகளில் சில மாற்றங்களைச் செய்துள்ளது. அந்த வகையில் தற்போது இதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.. இந்த புதிய விதிகளின் கீழ், வாடிக்கையாளர் ஒரு புதிய லாக்கர் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது அவசியம். ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை என்றால், உங்களுக்கும் லாக்கருக்கும் […]
Bank locker charges 1

You May Like