வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்ல ஓர் அரிய வாய்ப்பு!… மாநில அளவில் போட்டி!… பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு!

வரும் 13ம் தேதி முதல் வட்டார மற்றும் மாவட்ட, மாநில அளவில் அரசு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்படும் என்றும் அதில் வெற்றிபெறுபவர்கள் வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்படுவார்கள் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், அரசு பள்ளி மாணவர்களுக்காக பல்வேறு போட்டிகள் நடத்தப்பட உள்ளது. இந்தநிலையில், இப்போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களை வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. அந்தவகையில் தற்போது அரசு பள்ளிகளில் வானவியல் மன்றம், இலக்கிய மன்றம், வினாடி வினா மன்றம், சிறார் திரைப்படம் உள்ளிட்ட போட்டிகளை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும், இந்த போட்டிகள் வரும் 13ம் தேதி முதல் வட்டார மற்றும் மாவட்ட, மாநில அளவில் நடைபெற உள்ளது என்றும் இதில், 6 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பங்கேற்கலாம் என்றும் வெற்றி பெறும் மாணவர்கள் கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்படுவார்கள் எனவும் அறிவித்துள்ளது. ஏற்கனவே ஒருமுறை அரசு பள்ளி மாணவர்களை கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர். கடந்த ஆண்டு 6 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மாவட்ட மற்றும் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Kokila

Next Post

குழந்தையை கவனித்துக்கொள்ளும் உரிமை யாருக்கு?... கர்நாடகா உயர்நீதிமன்றம் கருத்து!

Sun Feb 12 , 2023
5 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளிடம் ஒரு தந்தையின் உரிமையை மறுக்க முடியாது என்று கர்நாடக உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. பெங்களூரில் 7வயது சிறுமிக்கு தந்தையும் பாதுகாப்பு வழங்கலாம் என்ற குடும்ப நல நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து சிறுமியின் தாய் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இதனை விசாரித்த நீதிபதிகள் அலோக் ஆராதே மற்றும் விஸ்வஜித் ஷெட்டி ஆகியோர் அடங்கிய அமர்வு, தாயின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து, குழந்தைக்கு […]

You May Like