அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் இல்லம் மீது திடீர் தாக்குதல் ; ஒருவர் கைது..!

jd vance 2

அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் வசிக்கும் ஓஹியோ மாநில இல்லத்தில் திங்கள்கிழமை தாக்குதல் நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக ஒருவரை போலீஸார் காவலில் எடுத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


சமூக வலைதளங்களிலும் உள்ளூர் செய்தி ஊடகங்களிலும் வெளியான புகைப்படங்களில், வான்ஸ் இல்லத்தின் ஜன்னல்கள் உடைக்கப்பட்டு சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. ஆனால், இந்த தாக்குதல் எவ்வாறு நடைபெற்றது, இதற்கான காரணம் என்ன என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக இதுவரை தெளிவான தகவல் வெளியிடப்படவில்லை.

இந்த தாக்குதல் சம்பவம் நடந்த நேரத்தில் வான்ஸ் குடும்பத்தினர் வீட்டில் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். இது ஜே.டி. வான்ஸ் அல்லது அவரது குடும்பத்தை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலா என்பதை போலீஸார் விசாரித்து வருகின்றனர். துணை ஜனாதிபதி அலுவலகம் அல்லது வெள்ளை மாளிகையிலிருந்து இதுவரை விரிவான அறிக்கை எதுவும் வெளியாகவில்லை.

வெனிசுவேலா அதிபர் கைது விவகாரத்தின் பின்னணி

இந்த சம்பவம் நடந்த சில நாட்களுக்கு முன்பு, அமெரிக்கா வெனிசுலா தலைநகர் காரகாஸில் இருந்து அதிபர் நிக்கோலஸ் மதுரோவை பிடித்து நியூயார்க்கிற்கு கொண்டு சென்றதாக தகவல்கள் வெளியாகின. அவர் மீது விசாரணை நடைபெறும் என அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார்.

இந்த இராணுவ நடவடிக்கையை ஜே.டி. வான்ஸ் ஆதரித்திருந்தார். வெனிசுலா போதைப் பொருள் கடத்தலில் முக்கிய பங்கு வகிப்பதாகவும், கைப்பற்றப்பட்ட எண்ணெய் வளங்களை “போதை பொருள் ” நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

வெனிசுலாவுக்கு உலக போதைப் பொருள் வணிகத்துடன் பெரிய தொடர்பில்லை என்ற விமர்சனங்களுக்கு பதிலளித்த வான்ஸ், எக்ஸ் வலைத பதிவு ஒன்றில், லத்தீன் அமெரிக்க போதைப் பொருள் கும்பல்களின் நிதி ஆதாரமாக கோகெயின் கடத்தல் இன்னும் மையப் பங்கு வகிக்கிறது என்று தெரிவித்தார்.

RUPA

Next Post

“உலகப் பத்திரிகையே நம்ம தமிழ்நாட்டை சூப்பர் ஸ்டார் ஸ்டேட் என்று சொல்றாங்க..” CM ஸ்டாலின் பெருமிதம்..!

Mon Jan 5 , 2026
கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கும் உலகம் உங்கள் கையில் திட்டத்தின் தொடக்க விழா சென்னை நந்தம்பாக்கத்தில் இன்று மாலை தொடங்கி நடைபெற்றது. முதல்கட்டமாக 10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.. இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின் “ புத்தாண்டை புத்துணர்வு மிக்க மாணவர் சமுதாயத்துடன் தொடங்குவது பாசிடிவ் எனர்ஜியை தருகிறது.. அடுத்த தலைமுறையை மனதில் வைத்து தான் “ உலகம் […]
cm stalin 2

You May Like