அடுத்தடுத்து திடீர் நிலச்சரிவு!… பூமிக்குள் புதைந்த வீடுகள், சாலைகள், மின்கம்பங்கள்!… பீதியில் மக்கள்!

Landslide: காஷ்மீர் ரம்பன் மாவட்டத்தின் பெர்னோட் கிராமத்தில் தொடர்ந்து நிலச்சரிவு ஏற்பட்டதால் வீடுகள், சாலைகள், மின்கம்பங்கள் பூமிக்குள் புதைந்ததால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

காஷ்மீர் மாநிலம் ரம்பான் மாவட்டத்தின் பெர்னோட் கிராமத்தில் கடந்த வியாழன் அன்று இரவில் திடீரென ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால், வீடுகள் எல்லாம் சேதம் அடைந்துள்ளது. சாலைகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. மின்சார கம்பங்கள் விழுந்து மின்சார சேவை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த நிலச்சரிவால் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அடிப்படை வசதியின்றி பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

நிலச்சரிவை தொடர்ந்து உடனடியாக கிராமத்திலிருந்த மக்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டு உள்ளனர். மாநில பேரிடர் மீட்புப் படை மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் உள்ளூர் மக்களுக்கு உதவிகளை செய்து வருகிறார்கள். மேலும் இந்த திடீர் நிலச்சரிவு ஏற்பட்டு, வீடுகள் கடும் சேதமடைந்ததற்கான காரணத்தை கண்டறிய புவியியல் நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

நிலச்சரிவு மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள ரம்பன் மாவட்ட துணை ஆணையர் செய்தியாளர்களிடம் கூறுகையில், இன்னும் சில இடங்களில் நிலச்சரிவு ஏற்படும் சூழல் நிலவி கொண்டிருக்கிறது. சாலை மற்றும் மின்சாரம் போன்ற அத்தியாவசிய தேவைகளை மீட்டெடுப்பதில் மாவட்ட நிர்வாகம் முன்னுரிமையாக கொண்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ முகாம்களை ஏற்பாடு செய்து வருகிறோம் என்றும், மீட்பு முகாம்களில் இருக்கும் மக்கள் பீதி அடைய வேண்டாம் என்றும், மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.

Readmore: தண்ணீர் பஞ்சந்தை சந்திக்கும் தென்னிந்தியா!… நீர்த்தேக்கங்களின் அளவு 17% ஆக குறைந்ததால் கவலை!

Kokila

Next Post

மாலத்தீவு இல்ல!... முதல்வர் ஸ்டாலின் இங்கதான் போகிறார்!... ட்ரோன்கள் பறக்க தடை!

Sun Apr 28 , 2024
CM Stalin: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓய்வெடுப்பதற்காக நாளை(ஏப்ரல் 29) குடும்பத்துடன் கொடைக்கானல் செல்லவுள்ளதால், மே 4ம் தேதிவரை ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்தார். பொதுக்கூட்டங்களிலும் பங்கேற்று, கூட்டணி வேட்பாளர்களுக்காக வாக்கு சேகரித்தார். காலையில் நடைபயிற்சி செய்யும் போதும், வாக்காளர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார். தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட முதல்வர், ஓய்வெடுக்கும் வகையில் ஒரு வார பயணமாக, மாலத்தீவு […]

You May Like