லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியான திரைப்படம் கூலி. இப்படம் வெளியாவதற்கு முன்பு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது. இந்தப் படத்தில் நாகார்ஜுனா, கன்னட நடிகர் உபேந்திரா, பாலிவுட் நடிகர் அமீர் கான், நடிகர் சத்யராஜ், நடிகை ஸ்ருதி ஹாசன் உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
கூலி திரைப்படம் வெளியான நாளில் இந்திய அளவில் ரூ. 65 கோடி வசூலித்து சாதனை செய்தது. இரண்டாம் நாளில் ரூ. 54.75 கோடியும், மூன்றாம் நாளில் ரூ. 39.5 கோடியும், நான்காம் நாளில் ரூ. 35.25 கோடியும் வசூலாகி, ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இந்த வேகத்தில் இப்படம் இரண்டு வாரத்தில் ரூ. 1000 கோடியை எட்டும் என பலரும் நம்பிக்கை கொண்டிருந்தனர்.
ஆனால், ஐந்தாம் நாள் முதல் வசூலில் ஏற்றத்தாழ்வுகளுடன் வசூலித்து வந்தது. ஆறாம் நாளில் வசூல் ரூ. 10 கோடிக்கு கீழே சரிந்தது. 8 நாளில் வெறும் ரூ. 6.15 கோடியாக வசூல் குறைந்துவிட்டது. இதனால், படக்குழுவினர் அதிர்ச்சியில் இருந்தனர். இந்நிலையில், கடந்த சனிக்கிழமை எதிர்பாராத வகையில், மீண்டும் சூடுபிடித்தது. அன்றைய தினம் ரூ. 10.5 கோடி வசூலாகியது. அதற்குப் பிறகு, ஞாயிற்றுக் கிழமையான நேற்று ரூ. 10.75 கோடி வரை சென்றது. இதன் மூலம் இந்தியாவிலேயே மொத்தமாக ரூ. 256.75 கோடியை தற்போது வரை ‘கூலி’ வசூலித்துள்ளது.
Read More : எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் எடை அதிகரிக்கக் கூடாதா..? ஜப்பானியர்களின் உணவு பழக்க ரகசியம்..!!