சென்னையில் இன்றைய (ஜூன் 11, 2025) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை தெரிந்து கொள்ளலாம்.
தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாக உள்ளது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. படிப்படியாக உயர்ந்த தங்கம் விலை சமீபத்தில் ரூ.74 ஆயிரத்தை கடந்து வரலாற்றில் புதிய உச்சத்தை தொட்டது. இதனையடுத்து, தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்தை சந்தித்து வந்தது.
சர்வதேச சந்தையில் நிலவும் நிச்சயமற்ற தன்மை, அமெரிக்க அதிபர் டிரம்பின் அதிரடி வரி விதிப்பு கொள்கை ஆகியவற்றால் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே வரலாறு காணாத அளவில் உயர்ந்து வருகிறது. இடையிடையே விலை குறைந்தாலும் பெரும்பாலான நாட்களில் விலை அதிகரித்தே காணப்பட்டது. பொருளாதார நிச்சயமற்ற சூழல் அதிகரித்ததால், தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்ததே விலை உயர்வுக்கு முக்கிய காரணியாக அமைந்து இருப்பதாக சர்வதேச வல்லுனர்கள் தரப்பில் கூறப்பட்டது.
ஜூன் மாதம் தொடங்கியதில் இருந்தே தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை, கடந்த மூன்று நாட்களாக திடீரென சரிவைச் சந்தித்தது. இந்நிலையில், ஜூன் 11 ஆம் தேதியான இன்று தங்கம் விலை கூடுமா? அல்லது குறையுமா? என நகைப் பிரியர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில் ஏமாற்றமே மிஞ்சியது.
நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக தங்கம் விலை இன்று உயர்ந்தது. அதன்படி தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.600 உயர்ந்து, ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.72,160க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு ரூ.75 உயர்ந்து ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.9,020க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி ரூ.1,19,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Read more: அதிமுக நிர்வாகிகள் அடுத்தடுத்து நீக்கம்.. ஷாக் கொடுத்த இபிஎஸ்!Read more: