பீகார் தேர்தலுக்கு பின், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (Special Intensive Revision – SIR) பணியின் 2-ம் கட்ட செயல்முறையை இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கியது.. அந்த வகையில் கடந்த மாதம் 4-ம் தேதி முதல் தமிழ்நாடு, புதுச்சேரி, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR நடவடிக்கை தொடங்கி நடைபெற்றது. வீடு வீடாக கணக்கீட்டுப் படிவம் விநியோகம் செய்வது, அதை பூர்த்தி செய்து பெறுவது, அவற்றை பதிவு செய்வது ஆகிய பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டன.
அந்த வகையில் தமிழ்நாட்டில் நவம்பர் 4-ம் தேதி தொடங்கிய SIR பணிகள் கடந்த 14-ம் தேதி உடன் முடிவடைந்தது.. இந்த சூழலில் தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.. அதன்படி தமிழ்நாட்டில் சுமார் 98 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் வரைவு பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.. தமிழ்நாட்டில் கடந்த அக்டோரில், அதாவது SIR-க்கு முன்பு மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை : 6,41,14,587, SIRக்கு பின் வாக்காளர்கள் எண்ணிக்கை : 5,43,76,755 ஆக உள்ளது..
மாவட்ட வாரியாக நீக்கப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை
சென்னை – 14,25,018
செங்கல்பட்டு – 7,01,871
கோவை – 6,50,590
திருவள்ளூர் – 6,19,777
திருப்பூர் – 5,63,785
மதுரை – 3,80,474
சேலம் – 3,62,429
திருச்சி – 3,31,787
ஈரோடு – 3,25,429
திண்டுக்கல் – 3,24,894
காஞ்சிபுரம் – 2,74,274
திருவண்ணாமலை – 2,51,162
கடலூர் – 2,46,818
வேலூர் 2,15,025
திருநெல்வேலி – 2,14,957
தஞ்சாவூர் 2,06,503
நாமக்கல் 1,93,706
விருதுநகர் – 1,89,964
விழுப்புரம் 1,82,865
கிருஷ்ணகிரி – 1,74,549
தூத்துக்குடி – 1.62.527
கன்னியாகுமரி – 1,53,373
தென்காசி 1,51,902
சிவகங்கை 1,50,828
ராணிப்பேட்டை 1,45,157
புதுக்கோட்டை – 1,39,587
திருவாரூர் – 1,29,480
தேனி 1,25,739
ராமநாதபுரம் – 1,17,364
திருப்பத்தூர் 1,16,739
கள்ளக்குறிச்சி – 84,329
தருமபுரி – 81,515
கரூர் – 79,690
மயிலாடுதுறை – 75,378
நாகப்பட்டினம் – 57,338
நீலகிரி – 56,091
பெரம்பலூர் – 49,548
அரியலூர் – 24,368
தமிழ்நாடு நீக்கப்பட்ட மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை : 97,37,832
வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்றால் என்ன செய்வது?
SIR பணிகளுக்கு பிறகு தற்போது வெளியிடப்பட்டுள்ளது வரைவு வாக்காளர் பட்டியல் தான். பெயர் இல்லை என்பதற்காக பதற்றம் அடைய வேண்டாம். முதலில், தேர்தல் ஆணையம், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி, மாநகராட்சிகள், மாவட்ட ஆட்சியரக இணையதளங்களில் வாக்காளர் அடையாள அட்டை எண்ணைப் பதிவிட்டு வாக்காளர்கள் பார்வையிடலாம்.
வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் மாறியவர்கள் படிவம் 8, புதிதாக சேருபவர்கள் படிவம் 6-ஐ பூர்த்தி செய்து ஆவணங்களுடன் வழங்கி வாக்காளர் பட்டியலில் ஜனவரி 18ஆம் தேதி வரையில் இணைந்து கொள்ளலாம். இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 17ஆம் தேதி வெளியிடப்படும். https://electoralsearch.eci.gov.in/
மேலும், வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள், அந்த பகுதி பிஎல்ஓக்களை அணுகலாம் எனவும் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது வாக்குச் சாடிவகளிலேயே முகாம்கள் நடத்தவும் தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
Read More : “திமுகவின் கனவு மண்ணோடு மண்ணாக போனது.. அவர்களின் சதிவலையில் விழவேண்டாம்..” இபிஎஸ் எச்சரிக்கை..!



