டிவி சீரியல் நடிகையை பண்ணை வீட்டிற்கு அழைத்து ஒருவாரம் உல்லாசம்..!! பிரபல நடிகரின் விபரீத ஆசை..!!

Cinema 2025

தமிழ் சினிமா பலருக்கு கனவையும், சிலருக்கு கனத்த சுமையையும் கொடுத்துள்ளது. பிரபலங்களின் வாழ்க்கைக்குப் பின்னால், பல மறைக்கப்பட்ட சாயல்கள் உள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மைதான். சினிமா துறையில் “அட்ஜஸ்மென்ட்” என்ற வார்த்தை, வாடிக்கையாக உலாவும் சூழலில், சிலர் அதை எதிர்த்து பேசுகிறார்கள். சிலர், நீதி தேடிக்கொண்டே இருக்கிறார்கள்.


அந்த வகையில், கோடம்பாக்கம் கதவுகளை தட்டி நுழைந்த ஒருவர், ஆரம்பத்தில் ஒரு உதவி இயக்குநராக தனது பயணத்தைத் தொடங்கினார். முதலில் இயக்கிய படம், பெரிய நடிகரை இரட்டை வேடத்தில் நடிக்க வைத்து, பாக்ஸ் ஆபிஸில் பலத்தை காட்டினார். தொடர்ந்து வந்த படமும் வெற்றி பெற்றதும், அவரது பெயர் தமிழ் திரைத்துறையில் முன்னணியில் செல்ல ஆரம்பித்தது.

தொடர்ந்து, நடிகராகவும் களமிறங்கிய இவர், சில வெற்றிகள் பெற்றாலும், பெரும்பாலான படங்கள் சரிவை சந்தித்தது. பிறகு சில வருட இடைவேளைக்கு பிறகு, வில்லனாக திரும்பி வந்தவர், அதில் கலக்கி, திரும்பவும் வாய்ப்புகளை குவித்தார். இவை எல்லாம் வெறும் திரைத்துறையின் வெற்றிக் கதைகள் மட்டும் அல்ல.

பின்னணியில், அந்த இயக்குநராகவும், பின்னர் நடிகராகவும், தற்போதும் முன்னணியில் இருக்கிற இவரின் ஒரு பொதுவாக அறியப்படாத பழக்கம் தொடர்ந்து பேசப்படுகிறது. புதிய நடிகைகள் மற்றும் வாய்ப்பு தேடுவோர் நேரில் வரும்போது, குறிப்பாக தனது பண்ணை வீட்டிற்கு வர அழைப்பது வழக்கமாக வைத்திருந்துள்ளார். சிலர் வாய்ப்பு கிடைக்கும் என நம்பி செல்ல, சிலர் மறுத்தும் வந்துள்ளனர்.

சமீபத்தில், இவருடைய நடிப்பில் தயாராகி வரும் ஒரு புதிய திரைப்படத்தில், ஒரு டிவி நடிகை, வாய்ப்புக்காகச் சந்தித்தபோது, பண்ணை வீட்டுக்கு வர அழைப்பு வந்துள்ளது. ஆனால், அந்த அழைப்பைத் தட்டி மறுக்காமல், அவர் சென்றிருக்கிறார் என்பதையும், ஒரு வாரம் அந்த நடிகருடன் நேரம் செலவிட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

இந்த சம்பவம், அந்த நடிகையின் காதலனுக்குத் தெரிந்ததும், இருவருக்கும் இடையேயான உறவு முறிந்துவிட்டது. இப்போது, பிரிவின் வலியால் அந்த டிவி நடிகை மன உளைச்சலுடன் இருக்கிறார். இந்தத் துறையில், வேலை வாய்ப்பு தேடி வருபவர்களுக்கு, வாய்ப்புக் கேட்டால் கூட ஒரு சோதனையாக மாறியிருக்கிறது. எந்தச் சூழலில், யாரிடம் எப்படிப்பட்ட அணுகுமுறை எதிர்நோக்க வேண்டி வருகிறது என்பது, கேள்விக்குறியாகவே உள்ளது.

Read More : இந்த ஒரு பொருள் இருந்தால் போதும்..!! உங்கள் வீடே பளிச்சென ஜொலிக்கும்..!! இல்லத்தரசிகளே சூப்பர் டிப்ஸ்..!!

CHELLA

Next Post

தொட்டியில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை கவ்விச் சென்ற தெரு நாய்.. திருவாரூரில் நடந்த கொடூரம்..

Wed Aug 20 , 2025
தமிழ்நாட்டில் தெரு நாய் கடியால் ஏற்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. பொதுமக்களும், குறிப்பாக குழந்தைகளும் தெரு நாய்களின் கடியால் பாதிக்கப்படுகிறார்கள். தெரு நாய் கடி தொடர்பான சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.. தமிழகத்தில் கடந்த 2022-ஆம் ஆண்டு 3 லட்சத்து 65 ஆயிரத்து 318- ஆக இருந்த தெரு நாய் கடி சம்பவம் தற்போது, 2023-ஆம் ஆண்டில் 4 லட்சத்து 40 ஆயிரத்து 921-ஆக அதிகரித்துள்ளது. இந்த […]
Stray dog Baby

You May Like