தஞ்சாவூர் மாவட்டத்தில் பெண் ஒருவரை கொன்று அவரது உடலை பானைக்குள் அடைத்து வைத்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பயத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. தஞ்சாவூர் மாவட்டம் பண்டாரவடை பகுதியைச் சார்ந்தவர் ஸ்ரீனிவாசன் இவரது மனைவி செல்வமணி (55). இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் மற்றும் மூன்று மகள்கள். இந்நிலையில் செல்வம் பணியை திருச்செந்தூர் போவதாக அருகில் உள்ளவர்களிடம் கூறியிருக்கிறார் இதனைத் தொடர்ந்து அவரை காண்பதற்காக அவரது மகள் ராஜலட்சுமி நேற்று மாலை வந்துள்ளார். அப்போது வீட்டின் கதவு பூட்டப்பட்டுள்ளது கவனித்திருக்கிறார் அவர். ஆனால் வீட்டில் உள்ளிருந்து ஏதோ துர்நாற்றம் வீசிக்கொண்டே இருந்திருக்கிறது.
இதனைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வீட்டு கதவை உடைத்து சென்று உள்ளே பார்த்தபோது வீட்டிலிருந்த ஒரு பித்தளை பானையில் செல்வமணி கொலை செய்யப்பட்டு தலைகீழாக வைக்கப்பட்டிருந்தார். மேலும் அவரது உடலிலிருந்த பானையின் மேல் மற்றொரு பானை வைக்கப்பட்டு மூடப்பட்டு இருந்தது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் செல்வமணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை அறிக்கைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்திய காவல்துறையினர் யாரோ மர்ம நபர்கள் வந்து செல்வமணியை கொலை செய்துவிட்டு தப்பி சென்றது தெரியவந்துள்ளது என தெரிவித்திருக்கின்றனர். மேலும் இந்த கொலைக்கான காரணம் என்ன என்று இன்னும் தெரியவில்லை. விரைவில் இந்த கொலையில் துப்பு கிடைக்குமென எதிர்பார்க்கபடுகிறது.