மனைவி பரிமாற்ற முறைக்கு ஒத்துப்போகாத பெண்ணை அவரது கணவன் அடித்து கொடுமைப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பிகனேரில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. மத்தியப்பிரதேசத்தின் போபாலில் இதுகுறித்து புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த புகாரில், பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் 5 ஸ்டார் ஹோட்டலில் மேனஜராக பணிபுரிந்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், அந்த புகாரில், ‘’அம்மார் (கணவன்) என்னை ஹோட்டல் ரூமில் அடைத்து வைத்ததுடன் எனது செல்போனையும் பறித்துச் சென்றுவிட்டார். 2 நாட்களுக்குப்பிறகு, போதை நிலையில் அம்மர் வந்தார். மது அருந்துதல், போதைப்பொருள் பயன்படுத்துதல், வெவ்வேறு பெண்களுடன் உடலுறவு வைத்துக்கொள்ளுதல் மற்றும் ஆண்களுடன் உடலுறவு வைத்துக்கொள்ளுதல் அவருக்கு மிகவும் சாதாரணமானது.

மேலும், மனைவி பரிமாற்றம் விளையாட்டுக்கு என்னை வற்புறுத்தினார். ஆனால், நான் அதற்கு மறுப்பு தெரிவித்ததால், அவர் என்னை அடித்தார். என்னை பண்பாடு தெரியாதவள் என அழைத்தார். மேலும் இயற்கைக்கு மாறான முறையில் என்னிடம் பாலுறவு வைத்துக்கொண்டார். இதனால், எனக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இருப்பினும் நான் அந்த விளையாட்டுக்கு ஒத்துக்கொள்ளவில்லை. எனது மாமியாரும், கணவனின் சகோதரியும் என்னிடம் ரூ. 50 லட்சம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தினர். நான் எனது கணவன் செய்பவைகளைக் குறித்து அவர்களிடம் எடுத்துக்கூறியும் அவர்கள் அதுகுறித்து கேட்கவில்லை. மாறாக, நான் ’மாடர்ன்’ ஆக இருப்பதாகக் கூறி என்னையே குற்றம்சாட்டினர். என்னை அவர் (கணவர்) பல மாதங்கள் அடித்து துன்புறுத்தினார். இதனால் எனது உடல்நலம் மிகவும் மோசமடைந்தது. பின்னர் எனது தாயாரின் உறவினர்கள் வீட்டுக்கு என்னை அழைத்துச்சென்றனர்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

அந்த புகாரின்பேரில், கணவன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது, இந்திய சட்டப்பிரிவுகள் 377, 498ஏ, 323, 506, 34, 3/4 ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாக காவல் அதிகாரி அஞ்சனா துருவ் தெரிவித்துள்ளார்.