நாட்டையே உலுக்கிய வைரல் வீடியோ..!அப்பாவி நபர் மீது குற்றம்சாட்டிய பெண் அதிரடி கைது..!

deepak.1.3664597 1

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்தவர் தீபக். 42 வயதாகும் ஒரு ஜவுளி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.. கடந்த வெள்ளிக்கிழமை இன்று கே.எஸ்.ஆர்.டிசி பேருந்தில் கண்ணூருக்கு பயணம் செய்தார்.. அப்போது தீபக் உடன் அதே பேருந்தில் பயணம் செய்த ஷிம்ஜிதா என்ற பெண் சமூக ஊடகங்களில் ஒரு வீடியோவை வெளியிட்டார்.


அந்த வீடியோவில் தீபக் தனக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக ஷிம்ஜிதா குற்றம்சாட்டினார்.. அவரின் தொடுதல் தற்செயலானது இல்லை என்றும் அவர் கடுமையான பாலியல் அத்துமீறல் எனவும் குறிப்பிட்டிருந்தார்.. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து தீபக் கடும் மன உளைச்சலில் இருந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர்.. இதையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை தீபக் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.. அவரின் மரணம் குறித்தும் அவர் பற்றி பரப்பப்பட்ட வீடியோ குறித்தும் கேரள காவல்துரை விசாரணை மேற்கொண்டது..

தீபக் மீது பாலியல் ரீதியாக குற்றம்சாட்டி ஆன்லைனில் வீடியோ வெளியிட்ட ஷிம்ஜிதா முஸ்தபா மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.. மேலும் தீபக் தற்கொலை செய்து கொண்ட நிலையில் கடந்த திங்கள்கிழமை அன்று பிணையில் வெளிவர முடியாத பிரிவின் கீழ் ஷிம்ஜிதா மீது வழக்குப்பதிவு செய்தது.

இந்த நிலையில் இந்த விவகாரத்தில் வீடியோ பதிவிட்ட பெண் கைது செய்யப்பட்டுள்ளார். வேண்டுமென்றே அந்த பெண் அவதூறு பரப்புவதற்காக வீடியோ எடுத்திருப்பதாக பலரும் கருத்து தெரிவித்திருந்தனர்.. சமூக வலைதளங்களில் ஷிம்ஜிதாவை திட்டியும் கடுமையாக விமர்சித்தும் பலரும் வீடியோ பதிவிட்டு வந்தனர்.. தன் மீது பெண் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் அவர் உறவினர் வீட்டில் பதுங்கி இருந்தார்.. இந்த நிலையில் ஷிம்ஜிதா முஸ்தபாவை போலீசார் கைது செய்தனர்..

RUPA

Next Post

இந்த 3 ராசிக்காரர்களுக்கு பிப்ரவரி மாதம் நிச்சயம் ஜாக்பாட் அடிக்கும்..!

Wed Jan 21 , 2026
2026 ஆம் ஆண்டு சூரியன் ஆதிக்கம் செலுத்தும் ஒரு சிறப்பான ஆண்டாகும். இந்த ஆண்டு சூரிய கிரகத்துடன் தொடர்புடைய மாற்றங்கள், ஜாதகக்காரர்களின் வாழ்வில் குறிப்பிடத்தக்க நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று ஜோதிடம் கூறுகிறது. ஜோதிடத்தில், சூரியன் கிரகங்களின் ராஜாவாகக் கருதப்படுகிறார். ஒரு நபருக்கு மரியாதை, புகழ், தன்னம்பிக்கை, தலைமைப் பண்புகள் மற்றும் அதிகாரம் தொடர்பான அம்சங்களை வழங்கும் முக்கிய கிரகமாக சூரியன் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டில் சூரியனின் பயணம் […]
Sunnakshatratransit2025effectonzodiactelugunews12 1

You May Like