திரிபுரா மாநிலம் கோமதி மாவட்டத்தில் நடந்த கொடூர சம்பவம் அங்குள்ள மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோமதி மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், நேற்று மாலை தனது பக்கத்து வீட்டுக்காரர்களான மிதுன் மற்றும் போவர் என்ற இரு இளைஞர்களுடன் அருகிலுள்ள கோவிலுக்கு காரில் சென்றுள்ளார். பின்னர் வீட்டிற்கு செல்லலாம் எனக் கூறி பெண்ணை மீண்டும் காரில் அழைத்துச் சென்றுள்ளனர்.
ஆனால், வீடு திரும்புவதற்குப் பதிலாக, உதய்பூர் ரயில் நிலையம் நோக்கி கார் சென்றது. இது வீட்டிற்கு செல்லும் வழி இல்லையே என அந்த பெண் கேட்க.. வாயை மூடி பெண் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். பின்னர் இருவரும் சேர்ந்து காரிலே அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். ஆள் நடமாட்டம் குறைவான பகுதி என்பதால் பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு உதவ யாரும் இல்லை..
இதே நேரத்தில், இரவு சுமார் 10 மணியளவில் அவர்கள் சென்ற கார் போலீசாரால் சோதனைச் சாவடியில் வழக்கமான சோதனைக்காக நிறுத்தப்பட்டது. இளைஞர்கள் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்ட நிலையில் இருவரிடமும் விசாரணை நடத்தினர். அப்போது காரில் இருந்த இளம்பெண் தனக்கு நடந்த பாலியல் வன்கொடுமை குறித்து போலீசாரிடம் தெரிவித்தார்.
போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்து, காரில் இருந்த மிதுன் மற்றும் போவர் ஆகிய இரு இளைஞர்களையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின் பேரில், இருவருக்கும் எதிராக பாலியல் வன்கொடுமை தொடர்பான பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Read more: 5 ஆண்டுகளில் ரூ. 7 லட்சம் வருமானம் கிடைக்கும்..! தபால் அலுவலகத்தின் சிறந்த திட்டம் இதுதான்!