Aadhaar | மக்களே..!! ஆதாரில் இந்த விஷயத்தை பண்ணிட்டீங்களா..? வெளியான முக்கிய தகவல்..!!

ஆதார் விவரங்களை இலவசமாக புதுப்பிப்பதற்கான காலக்கெடுவை UIDAI வரும் ஜூன் 14ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. பொதுமக்கள் தங்கள் ஆதாரில் உள்ள விவரங்களை இணையதளத்தில் இலவசமாக புதுப்பித்துக் கொள்ளலாம் என்று யுஐடிஏஐ தெரிவித்தது. இதன்மூலம் ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் அனைவரும் தங்கள் அட்டையில் தேவையான தகவல்களை மாற்றிக்கொள்ளலாம்.

முன்னதாக, இலவச புதுப்பிப்பு காலக்கெடு (மார்ச் 14) இன்று வரை என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த காலக்கெடு ஜூன் 14ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் ஆதார் விவரங்களை ஜூன் 14ஆம் தேதி வரை இணையதளத்தில் இலவசமாகப் புதுப்பித்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக, ஆதார் அட்டையில் உள்ள ஒவ்வொரு விவரத்தையும் புதுப்பிப்பதற்கு ரூ. 50 செலவாகும். அரசு தெரிவித்துள்ள கட்டணமில்லா இணைய சேவைகளுக்கு மட்டுமே இலவச வசதி பொருந்தும். மற்ற சேவைகளை ஆதார் மையங்களில் கட்டணம் செலுத்தி மாற்றிக்கொள்ள வேண்டும்.

Read More : Raid | சென்னையில் 10 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை..!! பரபரப்பு..!!

Chella

Next Post

தமிழ்நாட்டில் கோபி மஞ்சூரியனுக்கு தடையில்லை..! அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

Thu Mar 14 , 2024
கோபி மஞ்சூரியன் 1975ல் அறிமுகமாகி நாடு முழுவதும் பலரது விருப்ப உணவுகளில் ஒன்றாக இடம் பிடித்துள்ளது. வேகவைத்த காலிஃபிளவரை சோளமாவு மற்றும் அரிசிமாவில் கலந்து, எண்ணெயில் மொறுமொறுவென வறுத்து, ஒரு கிரேவி போன்று பரிமாறப்படும் கோபி மஞ்சூரியனுக்கு ரசிகர்கள் ஏராளம் இந்நிலையில் கோபி மஞ்சூரியில் சேர்க்கப்படும் மசாலாக்களும், செயற்கை நிறங்களும் உயிருக்கு ஆபத்தானவை என புகார்கள் எழுந்தன. இதனைத்தொடர்ந்து நடந்த ஆய்வில் சோப்புக்கொட்டை பொடி பயன்படுத்தப்படுவதாகவும், தரமற்ற சாஸ் வகைகளை […]

You May Like