தமிழக காவல் துறையின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக அபய்குமார் சிங் நியமனம்…! தமிழக அரசு உத்தரவு…!

2026

தமிழக காவல் துறையின் சட்டம் ஒழுங்கு டிஜிபியின் பொறுப்பை கூடுதலாக அபய்குமார் சிங்குக்கு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


தமிழகத்தின் சட்டம்- ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக உள்ள வெங்கடராமனுக்கு நேற்று முன்தினம் சுவாசிப்பதில் சிரமம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவர் கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு சில மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. தொடர்ந்து, அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டிஜிபியின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் அவர் ஓய்வு எடுக்கவும் மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

இதையடுத்து பொறுப்பு டிஜிபியான வெங்கடராமன் வரும் டிச.25-ம் தேதி வரை மருத்துவ விடுப்பு எடுத்துள்ளார். இதன்காரணமாக டிஜிபி பொறுப்பை கூடுதலாக அபய்குமார் சிங்குக்கு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சுமார் 27 ஆண்டுகள் அனுபவமுள்ள இவர், தற்போது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை டிஜிபியாக உள்ளார். அவருக்கு கூடுதலாக சட்டம் ஒழுங்கு டிஜிபி பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

தூள்..! ஓய்வு பெற்ற 42 பத்திரிகையாளர்களுக்கு மாதம் தோறும் ரூ.12 ஆயிரம் ஓய்வூதியம்...!

Thu Dec 11 , 2025
தமிழகத்தில் ஓய்வுபெற்ற 42 பத்திரிகையாளர்களுக்கு, மாதம் ரூ.12 ஆயிரம் ஓய்வூதியத்துக்கான ஆணைகளை முதல்வர் ஸ்டாலின் நேற்று வழங்கினார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; பேரிடர் காலங்களிலும் புயல், மழை, பெருவெள்ளத்தால் பொது மக்கள் பாதிக்கப்படும்போதும் பெரும் விபத்துகள், தொற்று நோய்ப் பரவல்கள் முதலிய சோதனைக் காலங்களிலும் இரவு பகல் பாராது ஓய்வின்றி பணி செய்து, உண்மைச் செய்திகளைத் திரட்டி மக்களிடம் கொண்டு சேர்த்து வரும், பத்திரிகையாளர்களின் […]
Tn Govt 2025

You May Like