ஆக்ரோஷமாக விளையாடிய அபிஷேக்-கில் ஜோடி!. பாகிஸ்தான் வீரர்களை பந்தாடி அபாரம்!. மைதானத்தில் வாக்குவாதம்!. வைரல் வீடியோ!

ind vs pak abhishek sharma

ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி வாகை சூடியது.


துபாயில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை தொடரின் லீக் ஆட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான கைக்குலுக்கல் விவகாரம் பெரும் பேசுப்பொருளாக மாறி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தநிலையில், மீண்டும் சூப்பர் 4 சுற்றில் இரு அணிகளும் மோதின. துபாய் சர்வதேச மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. டாஸ் வீசுகையில் கடந்த போட்டியைப் போலவே இன்றும் இரு கேப்டன்களும் கைகுலுக்கிக் கொள்ளவில்லை.

பாகிஸ்தான் அணி பேட்டிங்கைத் தொடங்கிய நிலையில் ஃபகர் சமாம் மற்றும் ஃபர்ஹான் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இந்தியா மீண்டும் முதல் ஓவருக்கு பந்து வீச ஹர்திக் பாண்ட்யாவை அழைத்தது. ஃபர்ஹான் பாகிஸ்தான் அணிக்கு சிறப்பாக தொடக்கத்தை அளித்தார். பும்ராவின் பந்துகளையும் அவர் சிறப்பாக எதிர்கொண்டு அரை சதம் கடந்தார். பவர்பிளே முடிவில் பாகிஸ்தான் அணி 1 விக்கெட் இழப்புக்கு 55 ரன்களை எடுத்தது. இது இந்தியாவுக்கு எதிராக அந்த அணியின் சிறந்த பவர்பிளே ஸ்கோர் என கிரிக் இன்ஃபோ இணையதளம் சுட்டிக்காட்டியது. 20 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் இழப்புக்கு 171 ரன்களை எடுத்தது. இதனால் இந்திய அணிக்கு 172 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ஃபர்ஹான் 34 பந்துகளில் 50 ரன்களை எடுத்தார்.

172 ரன்கள் இலக்குடன் இந்திய அணி பேட்டிங்கைத் தொடங்கியது. அபிஷேக் ஷர்மா மற்றும் சுப்மன் கில் இணை மிகச் சிறப்பான தொடக்கத்தை அளித்தது. குறிப்பாக அபிஷேக் ஷர்மா சிக்சர்களும், பவுண்டரிகளுமாக பறக்கவிட்டு வாணவேடிக்கை நிகழ்த்தினார். பவர்பிளே முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 69 ரன்கள் எடுத்தது. இந்த ஆசிய கோப்பை தொடரில் ஒரு அணியின் சிறந்த பவர்பிளே ஸ்கோர் இதுவே ஆகும்.

இதையடுத்து, ஆக்ரோஷமாக ஆடிய கில் – அபிஷேக் ஜோடி, முதல் விக்கெட்டுக்கு 105 ரன்களைக் குவித்தனர். இதனிடையே மைதானத்தில் அபிஷேக் ஷர்மா மற்றும் பாகிஸ்தான் வீரர் ஹரிஷ் ரவுஃப் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இருப்பினும் சுப்மன் அவர்களை சமாதானப்படுத்தினார். பின்னர் பாகிஸ்தான் பந்து வீச்சாளர்களான ஷாஹீன் அப்ரிடி மற்றும் ஹாரிஸ் ரவுஃப் ஆகியோருக்கு இந்திய பேட்ஸ்மேன்களான அபிஷேக் சர்மா மற்றும் ஷுப்மான் கில் ஆகியோர் தங்கள் பேட்டிங் மற்றும் வார்த்தைகளால் தொடர்ந்து பதிலளித்தனர்.

அரைசதம் எடுக்காமலே சுப்மன் கில் ஆட்டமிழந்த நிலையில், அபிஷேக் ஷர்மா 39 பந்துகளில் 74 ரன்களைக் குவித்து ஆட்டமிழந்தார். இதன் பின்னரும் சஞ்சு சாம்சன், திலக்வர்மா என இந்தியாவின் பேட்டிங் வரிசை நீண்டு கொண்டே சென்றது பாகிஸ்தான் அணிக்கு சவால் அளித்தது. 7 பந்துகள் மீதம் இருக்கையில் இந்திய அணி வெற்றி இலக்கை எட்டி, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் எக்ஸ்ட்ரா இன்னிங்ஸ் நிகழ்ச்சியில் பேசிய அபிஷேக், இந்த ஆக்ரோஷமான பேட்டிங்கிற்கான காரணத்தை விளக்கினார். பாகிஸ்தான் வீரர்களைப் பற்றி அபிஷேக் கூறியதாவது ‘அவர்கள் தொடர்ந்து எங்களைத் தூண்டிவிட்டு வந்தனர், எனவே அவர்களுக்கு பதிலளிக்க வேண்டியது அவசியம்’ என்று கூறினார். ‘அவர்கள் தொடர்ந்து தனிப்பட்ட தாக்குதல்களைச் செய்து வந்தனர், எனவே அவர்கள் இந்த முறையில் பதிலளிக்க வேண்டியிருந்தது’ என்று அபிஷேக் மேலும் கூறினார்.

Readmore: நாளை முதல் உங்களுக்கு பிடித்த பொருட்களை குறைந்த விலையில் வாங்கலாம்..!! பிரதமர் மோடி அறிவிப்பு..!!

KOKILA

Next Post

வெளியாக சூப்பர் தகவல்...! இந்த தீபாவளிக்கு இரட்டை போனஸ்...! எவ்வளவு வழங்கப்படும்...?

Mon Sep 22 , 2025
மத்திய அரசு ஊழியர்களுக்கான DA (அகவிலைப்படி) உயர்வு தீபாவளியையொட்டி அக்டோபர் 15-ம் தேதி அறிவிக்க வாய்ப்பு உள்ளது என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மத்திய அரசு ஊழியர்களுக்கான DA (அகவிலைப்படி) உயர்வு தீபாவளியையொட்டி அக்டோபர் 15-ம் தேதி அறிவிக்க வாய்ப்பு உள்ளது என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, 55%-ல் இருந்து 58% ஆக உயர்த்தி அகவிலைப்படி வழங்கப்பட உள்ளது. மேலும் டபுள் போனஸாக, ஜூலை மாதத்தில் […]
modi money

You May Like