30 பந்துகளில் அதிவேக சதம்; ஆப்கானை அடித்து நொறுக்கிய அபிஷேக்!. 3-0 என வீழ்த்தி தொடரைக் கைப்பற்றி இந்தியா அசத்தல்!.

india vs Afghanistan 30kb

டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற ஆப்கானிஸ்தானுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில், அபிஷேக் சர்மா புயல் வேகத்தில் ரன்களை குவித்து வரலாற்று சாதனை படைத்தார். அபிஷேக் சர்மா வெறும் 30 பந்துகளில் சதமடித்து, சர்வதேச டி20 போட்டிகளில் அதிவேக சதமடித்த இந்தியர் என்ற ரோஹித் சர்மாவின் சாதனையை முறியடித்தார்.


ஃபசல்ஹக் ஃபாரூக்கி, அஸ்மத்துல்லா ஒமர்சாய் மற்றும் ரஷீத் கான் ஆகியோரின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்த அபிஷேக், 34 பந்துகளில் 108 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதில் 102 ரன்கள் பவுண்டரிகள் மூலமே வந்தன. அபிஷேக்கின் அதிரடி மற்றும் சஞ்சு சாம்சனின் அரைசதத்தால் பவர்ப்ளேவிலேயே இந்தியா 100 ரன்களை கடந்தது. இறுதியில் இந்தியா 20 ஓவர்களில் 221 ரன்கள் குவித்தது.

222 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி, இந்திய பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 94 ரன்களுக்கு சுருண்டது. கேப்டன் இப்ராஹிம் ஜத்ரான் அதிகபட்சமாக 25 ரன்கள் எடுத்தார். இதன்மூலம், 127 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி, 3-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது. அதிரடி சதம் விளாசிய அபிஷேக் சர்மா ஆட்டநாயகன் விருதைப் பெற்றார்.

1newsnationuser5

Next Post

"இந்தி எதிர்ப்பு மனநிலையை தமிழ்நாடு மாற்றிக் கொள்ள வேண்டும்!" உச்ச நீதிமன்றம் அதிரடி கருத்து!

Fri Sep 18 , 2026
தமிழகம் முழுவதும் பள்ளிகளில் இந்தி கற்பிப்பது குறித்த தனது மனநிலையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், ஜவஹர் நவோதயா வித்யாலயாக்களை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. பள்ளிகளில் இந்தி கற்பிப்பதற்கு தமிழகம் தெரிவித்துள்ள எதிர்ப்பு தொடர்பான வழக்கை நீதிபதிகள் பி.வி. நாகரத்னா மற்றும் ஏ.ஜி. மசிஹ் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. விசாரணையின் போது, ​​தமிழக மண்ணில் இந்தி கற்பிக்க […]
supreme court 2025

You May Like