இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து புதிய இருசக்கர வாகனங்களுக்கும் 2026 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் ஏபிஎஸ் (Anti-lock Braking System) பிரேக்கிங் முறை கட்டாயமாக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் விரைவில் வெளியிட உள்ளது.
ஏபிஎஸ் என்பது, வாகன ஓட்டுநர் அவசர நிலையில் திடீரென பிரேக் அடிக்கும்போது, சக்கரங்கள் லாக் ஆகாமல் தடுக்கக்கூடிய ஒரு தொழில்நுட்ப பாதுகாப்பு முறை. இது வாகனம் ஸ்கிட் ஆகாமல், கட்டுப்பாட்டில் இருப்பதை உறுதி செய்கிறது. இதனால், வாகன விபத்துகளைக் குறைக்கும் முக்கிய சாதனமாக இது கருதப்படுகிறது. இதுவரை ஏபிஎஸ் முறையை 125 சிசி மேற்பட்ட சில வாகனங்களில் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பது கட்டாயமாக இருந்தது.
ஆனால் புதிய நடைமுறையின்படி, எல்லா வகை இருசக்கர வாகனங்களிலும் இந்த முறையை பயன்படுத்த வேண்டும் என்பது அரசு நோக்கம். இந்த புதிய விதிமுறை அமல்படுத்தப்படுவதால், வாகன உற்பத்தியாளர்களுக்கு உற்பத்திச் செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த கூடுதல் செலவுகள் நேரடியாக வாகன விலையை உயர்த்தும் என்பதே வல்லுநர்களின் கணிப்பு.
அதன்படி, ஏபிஎஸ் பொருத்தப்பட்டு வரும் இருசக்கர வாகனங்களின் விலை குறைந்தபட்சம் ரூ.3,000 முதல் ரூ.10,000 வரை கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது போன்ற விலையுயர்வு, நுகர்வோருக்கு ஒரு சுமையாகவே இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
இந்தியாவில் சாலை விபத்துகளில் 44% இரு சக்கர வாகனங்களால் ஏற்படுகின்றன. எனவே அவற்றின் பாதுகாப்பை மேம்படுத்துவது மிக முக்கியம். அனைத்து இரு சக்கர வாகனங்களுக்கும் ஏபிஎஸ் அறிமுகம் செய்வது மிகவும் அவசியமானது. ஏபிஎஸ் அமைப்பு கட்டாயமாக்கப்பட்டிருப்பதால் கூடுதல் செலவாகும் என்பத உண்மைதான். ஆனால் பாதுகாப்பே மிக முக்கியம்.
Read more: 43 வயதேயான தென்கொரிய நடிகை மர்ம மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகம்..!!