ராஜஸ்தானில் அரசுப்பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்து 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தானின் ஜலாவர் மாவட்டம் மனோகர் தானா தொகுதியில் உள்ள பிப்லோடி கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளியின் கூரை திடீரென இடிந்து விழுந்து பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தின் போது வகுப்பறையில் 40 மாணவர்கள் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த விபத்தில் தற்போது வரை நான்கு மாணவர்கள் உயிரிழந்ததாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். பல குழந்தைகள் இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பதாக அஞ்சப்படுகிறது. மீட்புப் பணிகளில் உள்ளூர் மக்கள், போலீசார் மற்றும் மீட்பு துறையினர் இணைந்து JCB இயந்திரங்களின் உதவியுடன் இடிபாடுகளை அகற்றி வருகின்றனர்.
காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மனோகர் தானா சமூக சுகாதார மையத்தில் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளனர். உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால், சம்பவ இடத்திலுள்ள சூழ்நிலை மிக மோசமாக உள்ளது. கட்டிடத்தின் இடிவு எதனால் ஏற்பட்டது என்பது குறித்து அதிகாரிகள் விசாரணையை தொடங்க உள்ளனர்.
Read more: #Flash : ஹேப்பி நியூஸ்.. இன்றும் தங்கம் விலை சரிவு.. நகை வாங்க சரியான நேரம்…