தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் தனுஷ் சூப்பர்
ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்துகொண்டார். இந்தத் தம்பதிக்கு லிங்கா, யாத்ரா என இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 2022ம் ஆண்டு தனுஷ் – ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து செய்வதாக அறிவித்தனர். இதை தொடர்ந்து 42 வயதாகும் தனுஷூம் 33 வயதுடைய மிருணாளும் கடந்த ஆண்டில் இருந்தே டேட்டிங்கில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சீதா ராமம், ஹாய் நானா போன்ற திரைப்படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகை மிருணாள் தாக்கூர். இதுவரை எந்த கிசுகிசுக்களில் சிக்காத நடிகையாக இருந்தார். இந்நிலையில் தனுஷ் பிரபல நடிகை மிருனாள் தாகூர் உடன் காதலில் இருப்பதாக பாலிவுட் மீடியாக்களில் செய்திகள் வெளியாகி இருக்கிறது. இது தொடர்பான சில வீடியோக்களும் இணையத்தில் வைரலாகிறது.
மிருணாள் தாஹூர் நடிப்பில் வெளியான சன் ஆஃப் சர்தார் 2 பட நிகழ்ச்சியில் நடிகர் தனுஷ் வருகை தந்தார். கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி மிருணாள் தாஹூர் தனது பிறந்தநாளை மும்பையில் கொண்டாடினார். இந்த பிறந்தநாள் பார்ட்டியில் தனுஷூம் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தார். அதே போன்று மும்பையில் நடந்த சன் ஆஃப் சர்தார் 2 படத்தின் பிரிமீயர் நிகழ்ச்சியிலும் தனுஷ் விசிட் தந்ததோடு இருவரும் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படமும் வைரலாகி வருகிறது.
பாலிவுட் இயக்குநர் எல்.ராய் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள தேரே இஷ்க் மே படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் நிறைவடைந்தது. இதுதொடர்பாக நடந்த இரவு பார்ட்டியில் மிருணாள் தாகூர் கலந்துகொண்டார். இந்த புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகின. அதனை தொடர்ந்து மிருணாள் தாக்கூருடன் தனுஷ் டேட்டிங்கா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.