ராஞ்சனா திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சி AI மூலம் மாற்றியமைக்கப்பட்டதற்கு நடிகர் தனுஷ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் தனுஷ் , சோனம் கபூர் நடித்து இந்தியில் வெளியான படம் ராஞ்சனா. தமிழில் இப்படம் அம்பிகாபதி என டப் செய்யப்பட்டு வெளியானது. திரைப்படம் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று ப்ளாக்பஸ்டர் ஹிட்டடித்தது. படத்தின் இசையை ஏ.ஆர் ரஹ்மான் மேற்கொண்டார். படத்தில் அமைந்த அனைத்து பாடல்களும் ஹிட்டானது.
இந்நிலையில் திரைப்படம் வெளியாகி 12 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் அண்மையில் படத்தின் கிளைமேக்ஸ் காட்சியை ஏஐ மூலம் மாற்றி ரீரிலீஸ் செய்துள்ளனர். அதில் தனுஷ் கடைசியாக உயிர் பெற்று வருவதுப் போல் காட்சிகள் அமைந்துள்ளது. இந்த நிலையில் நடிகர் தனுஷ் ராஞ்சனா படத்தின் கிளைமாக்ஸ் காட்சி மாற்றப்பட்டதை தொடர்ந்து தன் அதிருப்தியை தெரிவித்து இருக்கின்றார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ராஞ்சனா திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை ஏ.ஐ மூலம் மாற்றி ரீரிலீஸ் செய்திருக்கின்றனர். இது என்னை பாதித்துள்ளது என்று தான் சொல்லவேண்டும். கிளைமாக்ஸ் காட்சியை ஏ.ஐ மூலம் மாற்றியது அப்படத்தின் தன்மையையே மாற்றிவிட்டதாக தெரிகின்றது.
இதுகுறித்து என்னுடைய விருப்பத்தை நான் சம்மந்தப்பட்டவர்களிடம் ஏற்கனவே சொல்லிவிட்டேன். ஏ.ஐ மூலம் கிளைமாக்ஸ் காட்சியை மாற்றுவதில் எனக்கு சுத்தமாக உடன்பாடு இல்லை என நான் சம்மந்தப்பட்டவர்களிடம் சொல்லிவிட்டேன். இருந்தாலும் அவர்கள் கேட்டதாக தெரியவில்லை. இது நான் கமிட்டான ராஞ்சனா படம் கிடையாது. கிளைமாக்ஸ் காட்சியை ஏ.ஐ மூலம் மாற்றி அப்படத்தின் உண்மையான ஆத்மாவையே எடுத்துவிட்டனர்.
இதுபோல ஏஐ மூலம் ஒரு படத்தை மாற்றி அமைப்பது கலைக்கும் கலைஞர்களுக்கும் ஆபத்தான விஷயமாகும். கதை சொல்லையும், சினிமாவையும் பாதிக்கும் விஷயமாகும். எனவே இதுபோன்ற செயல்களை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என நான் கேட்டுக்கொள்கின்றேன் என்று தனுஷ் கோபமாக அந்த அறிக்கையை வெளியிட்டு இருக்கின்றார்.
Read more: இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்.. ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேர் கைது..!! நடுக்கடலில் பரபரப்பு..