பிரபல நடிகர் கசான் கான் உடல்நலக்குறைவால் காலமானார்.
மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவில் தனது தாக்கமான வில்லன் நடிப்பிற்காக அறியப்பட்ட பிரபல நடிகர் கசான் கான் காலமானார். வில்லன் கதாபாத்திரங்களில் நடித்த நடிகர், மாரடைப்பால் உயிரிழந்தார். திலீப் நடித்த ‘சிஐடி மூசா’ திரைப்படத்தில் வில்லனாக நடித்ததற்காக கசான் கான் பாராட்டுகளைப் பெற்றார். 1993 ஆம் ஆண்டு மோகன்லால் நடித்த ‘கந்தர்வம்’ படத்தின் மூலம் மலையாள திரையுலகில் நுழைந்தார்.
கசான் கான் “கந்தர்வம்”, “சிஐடி மூசா,” “தி கிங்,” “வர்ணபகிட்டு,” “ட்ரீம்ஸ்,” “தி டான், உள்ளிட்ட பல குறிப்பிடத்தக்க படங்களில் தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தினார்.1992 ஆம் ஆண்டு தமிழ் திரைப்படமான “செந்தமிழ் பாட்டு” திரைப்படத்தில் அறிமுகமானதன் மூலம் நடிப்பு உலகில் கசான் கானின் பயணம் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.