புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகத்திற்கு ஆதரவாக களமிறங்கிய நடிகர் ரஜினிகாந்த்..!!

புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக புதிய நீதிக் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதிய நீதிக்கட்சியின் நிறுவனர் தலைவர் டாக்டர் ஏ.சி.சண்முகம் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் தாமரைச் சின்னத்தில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், அரவிந்த் ரெட்டி, தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் மற்றும் ரஜினிகாந்த் அவர்களும் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (மார்ச் 21) வெளியான பாஜக வேட்பாளர்கள் பட்டியலில் ஏ.சி. சண்முகத்தின் பெயர் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Read More : AC ஓடும்போது சீலிங் ஃபேன் பயன்படுத்தினால் மின் கட்டணத்தை குறைக்கலாமா..? அட ஆமாங்க..!! விவரம் இதோ..!!

Chella

Next Post

சூது கவ்வும் 2-ம் பாகத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

Fri Mar 22 , 2024
வித்தியாசமான முறையில் உருவாகியுள்ள சூது கவ்வும் 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் 2013-ம் ஆண்டு சூது கவ்வும் படம் வெளியானது. இந்த படத்தில் சஞ்சிதா ஷெட்டி, அசோக் செல்வன், பாபி சிம்ஹா, ரமேஷ் திலக், கருணாகரன் என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் […]

You May Like