“கதைக்காக இப்படி ஒரு காட்சியில நடிச்சுட்டேன்” நடிகை சதா வேதனை..

‘ஜெயம்’ படம் மூலம் தமிழில், நடிகையாக அறிமுகமானவர் சதா. இவரது “போயா, போ” என்ற வசனத்திற்கு பல ரசிகர்கள் உள்ளனர். 2003-ம் ஆண்டு வெளியான இந்த படத்தை தொடர்ந்து எதிரி, வர்ணஜாலம், அந்நியன், பிரியசகி, உன்னாலே உன்னாலே, திருப்பதி உட்பட பல படங்களில் நடித்த அவர், தெலுங்கு, இந்தியிலும் நடித்து வந்தார். நடிகை சதா 2018 ஆம் ஆண்டு தமிழில் வெளியான டார்ச் லைட் என்ற படத்தில் நடித்திருந்தார். அதன் பின்பு தமிழில் எந்த படமும் நடிக்கவில்லை. டான்ஸ் நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் சதா நடுவராக இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் தனது சினிமா அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் கூறும்போது, ஜெயம் படத்தில் வில்லனாக நடித்த கோபிசந்த் தனது கன்னத்தில் நாக்கால் நக்குவது போன்ற காட்சி இடம்பெற்றது. இக்காட்சியில் நான் நடிக்க மாட்டேன் என இயக்குனரிடம் கூறினேன். ஆனால் இயக்குனர் கதைக்கு இது கட்டாயம் தேவை என்று கூறி நடிக்க சொன்னதாகவும், அந்த காட்சியை முடித்துவிட்டு வீட்டுக்கு சென்று அழுததாகவும், தற்போதும் இக்காட்சியை பார்த்தாலும், நினைத்தாலும் வேதனையாக இருப்பதாக கூறியுள்ளார்.

Maha

Next Post

லிப்ஸ்டிக் பயன்படுத்தும் பெண்களே எச்சரிக்கை!… கர்ப்பத்திற்கு ஆபத்தானது!… ஆய்வில் அதிர்ச்சி!

Tue Sep 26 , 2023
லிப்ஸ்டிக் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் ஈயம் கர்ப்பத்திற்கு ஆபத்தானது. இது ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்கும் அவளுடைய கருவுக்கும் தீங்கு விளைவிக்கும். லிப்ஸ்டிக் உதடுகள் வழியாக வயிற்றுக்குள் நுழைந்து இரத்தத்தில் ஈய அளவை அதிகரிக்கும்.லிப்ஸ்டிக்கில் உள்ள ரசாயனங்கள் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கின்றன. லிப்ஸ்டிக்கில் சேர்க்கப்படும் பெட்ரோ கெமிக்கல்கள் நுண்ணறிவு, இனப்பெருக்க அமைப்பு மற்றும் உடல் வளர்ச்சியில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்துகின்றன. பெண்கள் கவர்ச்சியாக தோற்றமளிக்க பயன்படுத்தும் அழகுசாதனப் பொருட்களில் ஒன்று லிப்ஸ்டிக். ஆனால் […]

You May Like