பிரபல மராத்தி நடிகர் சுனில் உடல் நலக்குறைவால் காலமானார்.
பிரபல நடிகர் சுனில் ஹோல்கர் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 40. சுனில் ஹோல்கரின் மரணம் மராத்தி திரை உலகில் துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு பெற்றோர், மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். சுனில் பல மராத்தி ஹிந்தி தொடர்களிலும், திரைப்படங்களிலும் பணியாற்றியுள்ளார்.
சுனிலின் கடைசிப் படைப்பு தேசிய விருது பெற்ற கோஷ்டா ஏக பைதானிச்சி திரைப்படத்தில் நடித்தார். இவர் கடந்த சில நாட்களாக உடல்நல பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தார். அவருக் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு மராத்தி திரை துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.