சற்றுமுன் தொடங்கியது……! நடிகர் விஜய் கல்வி விருது வழங்கும் விழா…..!

10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வில் சாதனை மாணவ, மாணவிகளுக்கு நடிகர் விஜய் ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி இன்று காலை 11 மணியளவில் தொடங்கியது. தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளிலும், 10 மற்றும் 12-ம் வகுப்பு பொது தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் உடன் ஊக்கத் தொகையும் வழங்குகிறார் நடிகர் விஜய்.


அதன்படி நடிகர் விஜய்யின் கல்வி விருது வழங்கும் விழா சென்னை நீலாங்கரை ஆர்.கே கன்வென்ஷன் மையத்தில் இன்று காலை 11 மணியளவில் ஆரம்பமானது. இந்த நிகழ்ச்சிக்கு வந்த நடிகர் விஜய் மாணவர்களுடன் அமர்ந்திருக்கிறார் விஜய். மக்கள் இயக்கம் சார்பாக இதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது.

சுமார் 5000 பேருக்கு காலை மற்றும் மதிய உணவு, வெளியூரிலிருந்து வரும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்டோர் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. முதலிடம் பெற்றவர்களுக்கு 25,000 ரூபாயும் 2ம் இடம் பெற்றவர்களுக்கு 15,000 ஆயிரம் ரூபாயும் 3ம் இடம் பெற்றவர்களுக்கு 10,000 ரூபாய் வழங்கப்படுவதாக தகவல்கள் கிடைத்திருக்கின்றன. அதோடு இந்த விருது வழங்கும் விழாவிற்கு 2 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த கல்வி விருது வழங்கும் விழா விஜயின் அரசியல் பிரவேசத்திற்கு அடித்தளமாக அமையலாம் என்று சொல்லப்படுகிறது

Next Post

திருப்பூர்| அரசு பேருந்தில் பயணம் செய்த பனியன் கம்பெனி தொழிலாளி…..! மாரடைப்பால் அமர்ந்த நிலையிலேயே உயிரிழந்த சோகம்….!

Sat Jun 17 , 2023
திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் புதூர் பாரதி பகுதியைச் சேர்ந்தவர் அசோக்குமார். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை இவர் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தார். மேலும் நாள்தோறும் அனுப்பர்பாளையம் புதூர் பகுதியில் இருக்கின்ற முதலியார் பாளையம் சிட்கோ பகுதியில் இருக்கின்ற பனியன் நிறுவனம் ஒன்றுக்கு பேருந்தில் வேலைக்காக சென்று வருவது இவருடைய வழக்கம் என்று கூறப்படுகிறது. அந்த வகையில், இன்று காலை வழக்கம் போல அனுப்பர்பாளையம் புதூரில் இருந்து அரசு பேருந்து […]
death 1

You May Like